ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

2.மாலியம்-மெய்ப்பொருட்கள் 3

மாலியத்தார் அனைவரும் அறிய வேண்டிய 3 மெய்ப்பொருட்கள். ************************************************** 1.தத்துவம். 2.ஹிதம் 3.புருஷார்த்தம். 1.தத்துவம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: (அ)சித்து – அறிவுடையன – சேதனம் (ஆ)அசித்து – அறிவற்றன – அசேதனம் (இ)ஈசுவரன். பரம்பொருளாம் ஈசுவரன், சித்து, அசித்து ஆகியனவற்றைத் தம் அங்கங்களாய்க் கொண்டு, முத்தொழில்களாம் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்து பிரபஞ்சத்தை இயக்குகிறான். 2.ஹிதம் – சீவான்மா தன் மாயாபந்தங்களை அகற்றிப் பரமாத்மாவை அடையும் நெறி. அதுவே “சரணாகதி” நெறி. இதைப் [...]

மாலியம்-முகவுரை

மாலியம் – முகவுரை   “நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால் மின்னையேசேர் திகிரி வித்துவக் கோட்டு அம்மா! நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியனே.” மிகுந்த ஒளிவீசும் சக்கராயுதத்தைக் கையில் ஏந்தி வித்துவக்கோட்டில் வதியும் அம்மானே (எம்பெருமானே)! மிகுந்த செல்வத்தை விரும்பாது உன்னை வேண்டி நிற்கும் அடியவருக்கு, செல்வத்தை விரும்பாதபோதும் விரும்பாதவனிடமே அச்செல்வம் சென்று அடையுமாப்போல், உன் மாயையினால் என்னை வெறுப்பதைப்போல் வெறுத்தாலும், உன் அடியவனாகிய நான் உன்னையே அடைய விரும்பி நிற்பேன். [...]