3.மாலியமும் வேதங்களும்
வேத சாத்திரங்களை அடிப்படையாய்க்கொண்ட இந்து தருமம்தான் சனாதன தருமம். சனாதன தருமம் எனில் “என்றும் உள்ள வழி. தொடக்கமின்றித் தொடரும் கொள்கை.” வாழும் வழிமுறைகளைத் தன்னிடத்தே கொண்ட, தனி மனிதனால் ஆரம்பிக்கப்படாத ஒன்று. வேதம் என்பது ஸ்ரீநாரயணனால், தன் மகனான பிரம்மாவைத் தன் தொப்பூழ் கொடியில் படைத்து, அவருக்கு உபதேசித்ததேயாம். என்ன உபதேசிக்கப்பட்டது? இப்பிரபஞ்சம் எந்த அடிப்படை விதிமுறைகளுடன் இருக்கவேண்டும் என்னும் ஞானமே வேதம். இதை எட்டு கால்களையுடைய அன்னப்பறவையின் உருவில் வந்து உபதேசித்தார். அன்னமே ஹம்ஸம். [...]
Posted: April 9th, 2008 under பக்தி, வைணவம்.
Comments: 5





