பிரபுலிங்க லீலை – 2.42
வீர மாகாளி வருதல் ********************** 2.42 வீர மாதருக் கில்லையென் றுரைப்பதென் விளங்க வீர மாதென அறிகிலி ரோவென விளம்பி வீர யோகினி வெள்ளமோ டமர்பொர விரும்பும் வீர காளியும் புகுந்தனள் அவையிடை விரைந்து. விளங்க – விளக்கமாக. அமர்பொர – போர்செய்ய. யோகினி வெள்ளம் – காளிக்கு ஏவல் செய்யும் கூட்டம். வீரம் மாதருக்கு இல்லையென உரைப்பவர் முன்னே, எருமைமுக அசுரன் முதலியோரை வென்ற வீர மாது நான் என அறிவீரோவென விளக்கமாக இயம்பித் தன்னாற்றல் [...]
Posted: November 10th, 2009 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





