ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

86.இறைவனா லெடுத்தமாட

86.இறைவனா லெடுத்தமாடத் தில்லையம் பலத்திலே அறிவினா வடுத்தகாய மஞ்சினா லமர்ந்ததே கருவிநாத முண்டுபோய் கழன்றவாச லொன்பதும் ஒருவரா யொருவர்கோடி யுள்ளுளே யமர்ந்ததே. கருவி = பொறியும், அந்தக்கரணங்களும் கருவி கழலுதல் = பலம் கெடுதல் நாதம் = விந்து தில்லையம்பலத்திலே உறையும்(எழுந்தருளியிருக்கும்) இறைவனால் ஐந்து பூதங்களாகிய நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகியவற்றால் மாடமாகிய உடல் உருவாக்கப்பட்டது. அதில் நாதமாகிய விந்து பெலம் குன்ற(குறைய), பொறிகளும் அந்தக்கரணங்களும் பெலம் குன்றி சீரழிந்துவிடும். அப்படி விந்து நாதம் பெலம் குன்றாது, ஒன்பது வாயில்களான, [...]

சிவவாக்கியர் – 5

5.என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின் என்னிலே இருந்த ஒன்றை யார் காண வல்லவரோ? என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே! இப்பாடலின் கரு ஏக இறையைக் குறிக்கிறது. ஏக இறைதான் ஆதி. விந்துவே ஆதி. இவ்விடத்து, பீர் முகம்மது அவுலியாவின் ஆநந்தக் களிப்பின் ஒரு பாடலை நினைவு கூருதல் அவசியம். “இவ்வென் றெழுத்ததைப் பற்றி – இரு வாசலைப் பூட்டி யடைத்துப் பிடித்துக் கொல்லன் றுத்திகொண் டூதி [...]

ஞானம் எட்டி-24

24. அந்தமுள்ள குருவினடிக் கமலம் போற்றி ……….. யன்னைதந்தை யிருவருந்தா னனுபோ கிக்கத் தந்திரமா யிரவுதனி லணையும் போது ……… தாதுவிந்து நாதமது வெழுந்த போதில் எந்தவுயிர் வேதமறை யறிந்த தாண்டே ……. யிடும்பரெல்லா நீசரென்று தள்ளினார்கள் வந்தவழி போனவழி யிரண்டுஞ் சொல்வேன் …… வகையறியா மாந்தர்களே யறிந்து கொள்வீர். வந்தவழி, போனவழி ஆகிய இரண்டையும், வகை(கூறுபாடு, வழிவகை, சாதியினம், வலிமை) அறியாத மாந்தர்களே, அழகுள்ள குருவின் திருவடித்தாமரைகளைப் போற்றி வணங்கிக் கூறுவேன்; அறிந்துகொள்ளுங்கள். அன்னை தந்தை [...]