ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

சிவவாக்கியர் – 3

3.உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல் விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும் அருட்டரித்த நாதர்பாத மம்மைபாதம் உண்மையே. கருத்தரித்து உருவாக வெளிவரக் காரணமான நாடியில் ஒடுங்கக் கூடிய உயிர்ப்பு சக்தியான வாயுவைக் , அருள் உடைய சிவபாதமாம் வலக்கண், சக்தி பாதமாம் இடக்கண் ஆகியவற்றின் உதவியால் கருத்தினால் ( ஆணி அறைவதுபோல) இருத்திக் கபாலக் குகைக்குள்ஏற்ற முடிந்தவர் கிழவன் ஆனாலும் குமரன் ஆவான். உடலும் பொன்போல் ஒளிவீசும்.

ஞானக் குறள்-(31-40)

4. நாடி தாரணை (31-40) ****************************** 31. எழுபத் தீராயிர நாடி யவற்றுள் முழுபத்து நாடி முதல். உடலிலுள்ள எழுபத்து ஈராயிரம் நாடிகளுக்குள் உள்ள பூரணமான பத்து நாடிகளுக்குள் முதலானதும் ஆதியானதுமான உயிர் நாடியே தலையானது. பூரணமான பத்து நாடிகள் : இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு. இவற்ரை முறையே, இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி [...]