பிரபுலிங்க லீலை-1.2-நூலாசிரியர் வரலாறு
பிரபுலிங்க லீலை ******************** நூலாசிரியரின் வரலாறு ************************** தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தில் வேளாளர்களின் ஞானகுருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர். இவர் ஆண்டுதோறும் தவறாது திருவண்ணாமலைக் கார்த்திகை தீபம் கண்டு தொழுதுவரும் தகையாளர். திருவண்ணாமலையார் திருவருளால், சிவப்பிரகாசர், வேலையர், கருணைப்பிரகாசர், ஞானாம்பிகை எனும் மக்கட்செல்வத்தைப் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்து வந்தார். மக்களின் கல்விப்பருவத்திலேயே, குமாரசாமி தேசிகர் இறையடி சேர்ந்தார். பின்னர், மூத்தவர் சிவப்பிரகாசர் தம் தம்பியரொடு திருவண்ணாமலையெய்தி, ஆங்கு தெற்கு வீதியிலுள்ள திருமடத்தில் எழுந்தருளியிருந்த குருதேவரைக் கண்டு வணங்கி [...]
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





