பிரபுலிங்க லீலை – 2.38
வசிட்டர் முதலிய முனிவர்கள் வருதல் 2.38 அழிவும் ஆக்கமும் உரையினாற் செயும்வலி அடைந்தார் மொழியும் யாக்கையு மனமுநல் அறங்களின் முயன்று கழியு மாறுமுக் காலமு முளர்தளை கழன்றார் பழியி லாவதிட் டாதிமா முனிவரர் பரந்தார். ஆக்கம் – பெருக்கம். உரை – வாய்மொழி. தளை கழன்றார் – உலகப் பற்றுக்களினின்றும் விடுபட்டவர். பரந்தார் – பரவினார்கள். முக்காலமும் உளர் – மூன்று காலத்திலும் இருப்பவர்கள். பழி இல்லாத வசிட்டர் முதலிய இருடி(ரிஷி)கள் வந்து பரவினார்கள். அந்த முனிவர்களது [...]
Posted: February 14th, 2009 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





