பிரபுலிங்க லீலை-1.4
பிரபுலிங்க லீலை ******************* 4.முருகக் கடவுள் ******************** 4.பாக மொருபெண் குடியிருக்கும் பரமன் அணியிற் பரித்தமணி நாக நுழைவுற் றுடல்சுருண்டு கிடந்து நகுவெண் தலைப்புழையிற் போக மெல்லத் தலைநீட்டிப் பார்த்து வாங்கப் போகுமொரு தோகை மயில்வா கனப்பெருமான் துணைத்தாட் கமலந் தொழுதிடுவாம். இடப்பாகத்தில் அம்மையொடு காட்சி தரும் ஐயன் அணிகலனாகத் தாங்கியுள்ள மணிநாகம் உடல் சுருண்டு கிடந்து நகைப்பதுபோல் விளங்கும் வெள்ளிய தலைவாயிலின் வெளியேபோக மெல்லத்தலையை நீட்டிப்பார்த்து, ஆங்கே மயில்வாகனனையும் மயிலையும் கண்டு தன் இனத்திற்குறிய அச்சத்துடன் [...]
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none
முத்தைத்தரு பத்தித் திருநகை
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்திக் குருபன் – எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரு முப்பத்துமு வர்க்கத் தமரரு – மடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியி – விரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வது – மொருநாளே தித்தித்தெய வொத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு – கழுதாடத் [...]
Posted: April 4th, 2008 under சைவம், பக்தி.
Comments: 4
முருகன் – உருவ விளக்கம்
கீழ்கண்ட அநுபவமுத்துக்கள், குன்றுதோறாடல், கந்தபுராணம் ஆகியவைகளில் கூறப்பட்டவைகளிலிருந்தும், என் பெரியப்பன், சிதம்பரம் இராமலிங்கம் அவ்வப்போது ஆங்காங்கே கூறியவைகளிலிருந்தும் புரிந்துகொண்டவை. முருகனை ஏன் படங்களிலும், பாடல்களிலும் சித்தரித்துள்ளனர் என்று கொஞ்சம் சிந்தித்தல் அவசியமே : முகம் ஆறு – ஆறு சோதியாகவும், ஆற்றறிவாயும், ஆறுதலையுடையதாக இருப்பதால் முகம் ஆறுதலைத் தருவதாலும் ஆறு முகமுண்டாயிற்றென்று விளம்பலுமுண்டு. கால் இரண்டு – தோன்றும் அறிவு, தோற்றுவிக்கும் அறிவு – என்ற இரண்டறிவாகிய விடய உணர்வும், நிர்விடய உணர்வும் ஆகும். கை பன்னிரண்டு [...]
Posted: April 4th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 6





