ஞானம் எட்டி-31
31.சபைதனி லுள்ளவர்காள் ஆண்டையேகேள் சாதியி லீனனெனச் சாற்றுகிறீர் உறுபய மில்லாமலும் அகஞ்சுத்தி யுடலறியார் செபங்க ளோதுகிறீர் வபையமதா கியநூல்கள் வீண்பிலுக்கர் வாசியறி யாமலுமே மயங்குகிறீர் ஒளவையார் குலத்தில்வந்த வள்ளுவனெனும் ஆதி பீடமு நான்காணும். சபையிலுள்ள ஆண்டைமாரே கேளுங்கள், என்னை சாதியில் (ஈனன், நீசன்) தாழ்ந்தவனெனச் சொல்லுகிறீர்கள். உறு(மிகுதியான) பயமில்லாமலும், தன் உடலினுள் சுற்றி வந்து உடலுக்குள் இருக்கும் இரகசியங்களை அறியாமல் முனுத்தங்களை(மந்திரங்களை) முனுமுனுக்கிறீர்கள். நூல்களையும், வீண்பேச்சுக்கள் பேசும் புல்லர்களின் வார்த்தைகளையும் கண்டு மயங்குகிறீர். தன் வாசி எங்கிருந்து [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: 2





