பிரபுலிங்க லீலை-1.8
மடிவாலமாச்சையர் ************************ 8. வார்க்குங் குமமென் முலைபாக ………….. னடியார் அறுவை மாசடித்துத் தீர்க்குஞ் செயல்போல் விச்சலமன் ………… னவன்றன் சேனை செய்பிழையைத் தாக்குங் கரவாள் கொடுசின்ன ……….. பின்ன மாகத் தடித்திட்டுப் போக்குங் கருணை மடிவால …………. மாசன் பொன்னங் கழல்போற்றி. கச்சு(வார்)கட்டிய குங்கும மென்முலையாளாம் சத்தியின் பாகனாம் சிவனின் அடியார்களின் ஆடை(அறுவை)களை அழுக்குப் போக்கி(மாசடித்து)த் தூய்மைப் படுத்திக் கொடுக்குங்கால், அவ்வடைகளை அறியாது தீண்டத்தகாதவன் தீண்டியதால், சினமடைந்து, மடிவாலமாச்சையர் தன் கை(கர)வாளால் அவனைக் கொன்றார். அதுகேட்டு, [...]
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





