பழமொழி 600
526.மகன் செத்தாலும் சரி; மருமகள் கொட்டம் அடங்க வேண்டும் 527.மதி இல்லா விண்ணானேன்; மருந்து இல்லா புண்ணானேன். 528.மனம் போல மாங்கலியம் 529.மனைவி இல்லாதவன் அரை மனிதன் 530.மரம் வைத்தவன் தண்ணி ஊத்துவான் 531.மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். 532.மறைவிலே பெண்டாட்டி; மந்தையிலே அக்கச்சி. 533.மலை போல் வந்தது பனிபோல் விலகியது 534.மழைவிட்டும் தூவானம் விடாததுபோல் 535.மாடு மேய்க்கவும் வேணும்; மச்சினனுக்குப் பெண் பார்க்கவும் வேணும். 536.மாமியா உடைச்சா மண் குடம்; மருமகள் உடைச்சா பொன் குடம். [...]
Posted: February 7th, 2009 under தமிழமுது, பழமொழிகள் 615.
Comments: none





