பிரபுலிங்க லீலை-1.15
பிரபுலிங்க லீலை ******************** 15. புறங்கறை ஒழுகுசெம் புண்ணில் ஈயென வருங்கதை புல்லியர் கொள்வர் மாமலர் உறுங்களி வண்டினல் லமனொண் காதையைப் பிறந்துள பயன்பெறு பெரியர் கொள்வரே. வெளிப்பக்கத்தே குருதி(கறை) ஒழுகும் ஆறாத புண்ணில் ஈ மொய்த்தது போல் இழிந்தோர்(புல்லியர்) வெறுங்கதை (வருங்கதை) பேசுவர். ஆனால், பிறந்ததன் பயனை (பிறந்துள பயன்பெறு) அடைய நினைக்கும் பெரியவர்கள், மலரில் தேனுக்கு மொய்க்கும் வண்டினம்போல் அறநெறி நூலாம் அல்லம காதையைச் சிறப்பாகக் கொண்டு, கற்று, உணர்ந்து அதன்படி நடப்பர்.
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





