பிறப்பறுக்க
சிவவாக்கியர் – 95 *************** ஆலவித்தி லாலொடுங்கி யாலமான வாறுபோல் வேறுவித்து மின்றியே விளைந்துபோக மெய்திடீர் ஆறுவித்தை யோர்கிலீ ரறிவிலாத மாந்தரே! பாருமித்தை யும்முளே பரப்பிரம மானதே. ஆலவிதையோ சிறியது. அதற்குள் பெரிய ஆலமரம் உள்ளதை உண்ர்ந்தீரா? ஆலவிதை போன்ற நம் மனதில் தோன்றும் எண்ணங்களால் உண்டாகும் ஆசைகளால் ஆலமரம் பெருகுவதுபோல் பிறப்புக்கள் உண்டாகின்றன. இந்த எண்ணங்களை ஒழித்துத் தன்னுள் ஒடுங்கி ஆறு ஆதாரங்களையும் தாண்டிப் பரப்பிரும்மத்துடன் ஒன்றிடப் பிறப்பறுக்கலாம்.
Posted: September 20th, 2010 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: 2





