ஞானக் குறள்-(51-60)
6. அங்கிதாரணை (51-60) ************************** 51. அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கிற் பந்தப் பிறப் பறுக்கலாம். சூரிய சந்திர கலைகளை அக்கினி கலையோடு கலந்து நோக்கில், அக்கினி(அங்கி)யான மூல அக்கினி சுவாலைபோல் கிளர்ந்து எழுந்து உச்சி நோக்கிப் பாயும். இப்பயிற்ச்சியைத் தொடர்ந்து செய்தால் (அந்தத்தில்) முடிவில் பிறப்பெடுக்கும் பந்தபாசங்களை அறுத்து விடலாம். “ஊதியறி வாய்கொண்டு ஊதிப்பாரு, உள் பத்திக் கொண்டுதடா தானே தானாய், ஊதியறி வாயறிய மாட்டாயானால் உன்னாணை ஊதிபங்க ளொன்றுமில்லை.” “ஊதுகிற வூத்தறிந்தா லவனே சித்தன்” [...]
Posted: April 6th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 14





