ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானம் எட்டி-51

51.அண்டபிண்டபுவனத்துக்கும் சந்திரனொளி ………ஆதித்தவருருவு மானதெங்கே சண்டப்பிரசண்டமதாய் மந்திரமோதுஞ் சவுங்கலே ………..தானறியாய்ச் சாற்றிடுவீர்காண் உண்டதோருணவறியார் உவரசத்தினுப்பு ………….வினுவரகற்றி யுண்டுமறியார் கண்டபொருள் விண்டதறியார் கல்லுப்புவந்த …………..காரணத்தைக் கண்டறியாக் கர்மிகளே கேள். ஆடம்பரமாய் ஏகப்பட்ட சத்தங்கள் செய்து மகாசிறப்புடனே மந்திர உச்சடானஞ் செய்கின்ற அறிவு மழுங்கியோரே! உண்டவுணவை யுணராமலும், உவர்ப்பூமியிலுண்டான உப்பையெடுத்து அதனிடமுள்ள உவர்ப்புச் சுவையை நீக்கி அதை உண்ண அறியாமலும், கண்ணால் கண்ட பொருட்களைச் சொல்ல அறியாமலும் கல்லுப்பு வந்த காரணத்தை அறியாமலுமிருக்கின்ற கர்மிகளே! நீங்கள் அண்ட பிண்ட சராசரங்கள் [...]

ஞானம் எட்டி-46

46.உதிரமுந்திரண்டதெங்கே நாதமதி லோடியேதான் ………….விந்ததுவும் பாய்ந்ததெங்கே மதியொளிரவியுமெங்கே அமிர்தரச வாருதியுமான …………..வரலாறுமெங்கே உதிரமும்பிறந்ததெங்கே உலகுதனில்சாத்திரியாசாரிகளே ………….தானுரைப்பீர்காண் அதிதவேதங்களோதும் சூரியசந்திரர் அனைவரிருந்தவர்க ………….ளாண்மையுரைப்பீர் . உலகத்திலுள்ள சாத்திரிகளே! ஆசாரியர்களே! உதிரம் பிறந்தது எங்கே? உதிரம் திரண்ட இடம் எங்கே? நாதத்தில் விந்து பாய்ந்தது எங்கே? நீங்கள் சூரியன் சந்திரன் ஆகியோர் கிரகங்கள் என்றும் அந்தந்தக் கிரகங்களுடைய வல்லமைகளையும் எடுத்துச் சொல்லுவீர்கள் அல்லவா? அமிர்தரசபெருக்கெடுத்துப் பாய்ந்தது எங்கே? எனும் தத்துவம் தெரிந்தால் எடுத்துச் சொல்லுங்கள். வேதங்களை மிக ஓதும் நீங்கள், [...]