ஞானக் குறள்-(151-160)
2.திருவருட்பால் *************************** 16.முத்தி காண்டல் (151-160) ***************************************** 151. மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம் அனைத்தினு மில்லை யது. உட்கரணங்களாகிய மனம், புத்தி, செருக்கு (அகங்காரம்), உள்ளம்(சித்தம்) ஆகியவற்றில் முத்தி கிடையாது. 152. வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள் ஆக்கிய நூலினு மில். வாக்கு வல்லமை உடையோராலும், பெயர் புகழுக்கு ஆசைப் படுபவராலும், ஐயம் முதலியவை நீங்காது மயங்கிக் கொண்டிருக்கும் மதத்தை யுடையோராலும் எழுதப்பட்ட நூல்களாலும் முத்தி கிடையாது. [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 2





