ஞானக் குறள்-(231-240)
3. தன்பால் ************* 24. கண்ணாடி (231-240) ******************************** 231. கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள் உண்ணாடி நின்ற வொளி. உடலினுள்ளிருக்கும் குண்டலிக்குள் உறைந்திருக்கும் ஒளியானது, சூரியவொளியில் வைத்த கண்ணாடிக்குள் தெரியும் சூரியனின் உருவைப்போல் இருக்கும். 232. அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத் துஞ்சுவ தில்லை உடம்பு. ஐம்புலன்களின் சக்திகளைப் பிரணவத்தில் சேர்க்க வகையறிந்தால், உடலிழக்கவேண்டாம். திருமந்திரம்: “பாய்ந்தன பூதங்க ளைந்தும் படரொளி சார்ந்திடு ஞானத் [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 2





