கந்தர் கலிவெண்பா – 1
1.பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு நாதமும் நாதாந்த முடிவு நவைதீர்ந்த போதமுங் காணாத போதமாய் – ஆதிநடு பூமேவு செங்கமலம் என்பதை, செங்கமலப் பூமேவும் எனக் கொள்க. புத்தேள் = இறைவன், தெய்வம். தேறு = தெளிதல் அரிய = இயலாத, முடியாத பாமேவு = செய்யுள்(பாட்டு) நடையில் பொருந்திய பழமறை = பண்டைத் தமிழ் வேதம் தே = சிவம் நாதமும் = நாத தத்துவமும் நாதாந்தம் = [...]
Posted: April 7th, 2008 under கந்தர் கலிவெண்பா, பக்தி.
Comments: 2





