நவராத்திரி விழா(விரதம்) – கரு(த்து)
பக்தி நிலை ஒழுகுவார்க்கு, அவர்தம் பாங்கிலே விளக்கினோம். அந்நிலை கடந்து அடுத்த நிலையிலுள்ளார்க்கு இப்பொழுதே இயம்புவாம். “எங்கெங்கு காணிணும் சக்தியடா”, என்றான் பாரதி. நவராத்திரி வழா(விரதம்) இருப்பதன் தத்துவம் என்ன? முதலில் (விந்து, அண்ட)சக்தியால் தோன்றிய உயிர், தன்னைப் உண்டாக்கிய(படைத்த) சக்தியை வணங்குதலாம். அப்பொழுது விரதம் இருந்து விந்து சக்தியடக்கி, சக்தியை வளர்த்துக் கொள்ளல் வேண்டும். திருமந்திரம்: “பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும் மறப்பை யறுக்கும் வழிபட வைக்கும் குறப்பெண் குவிமுலை கோமள வல்லி சிறப்பொடு பூசனை [...]
Posted: April 4th, 2008 under சைவம், பக்தி.
Comments: 10
நவராத்திரி – ஒன்பதாம் நாள்
பராசக்தியை ஒன்பதாம் நாள் பிரமி(பெருமி – ப்ரம்மி)யாகக் கருதி வழிபாடு செய்யவேண்டும். பிரமி பிரமனின்(படைப்புக் கடவுள்) சக்தி. சரசுவதியும் (சரசு=குளம்; வதி=வசிப்பவள்) இவளே. அன்னமிழுக்கும் விமானத்தில் பயணிக்கும் இவள் வெள்ளைத் தாமரைப்பூவில் ஞானத்தின் உருவமாக இருப்பவள். இவளுக்குப் பிடித்த ஆசனம் தர்ப்பைப் புல். பவுத்த மதத்தில் சரசுவதிக்கு சிம்ம வாகனம். வேதாரண்யத்தில் “யாழைப் பழித்த மொழியாள்” என்னும் பெயருடன் அம்மை வீற்றுள்ளாள். “கல்விக்கதிபதியான சரசுவதியை முறையுடன் மனமாற வேண்டுபவருக்கு, தேன்,பால்,திராட்சை போன்ற இனிய [...]
Posted: April 4th, 2008 under சைவம், பக்தி.
Comments: 2
நவராத்திரி – எட்டாம் நாள்
எட்டாம் நாளில் அம்மையை நரசிம்மியாக அலங்காரம் செய்து பூசிக்கவேண்டும். அன்னை மகாலட்சுமிதான் நரசிம்மி. இரணியனை வதைத்த நரசிம்மத்தின் சக்திதான் நரசிம்மி. அவருக்குண்டான சக்திகளும், ஆயுதங்களும் அம்மைக்கு உண்டு. எதிரிகளை வெல்ல இவ்வம்மையை வணங்குவர். தமரையும், சிங்கமும் இருக்கைகளாம். (படங்கள்: வலையிலிருந்து எடுக்கப்பட்டவை) படையல்: சர்க்கரைப் பொங்கல் துதிக்கவேண்டிய இராகம்: புன்னாக வராளி
Posted: April 4th, 2008 under சைவம், பக்தி.
Comments: 2





