ஞானம் எட்டி-48
48.தீர்த்தமுமாடிக்கொள்வீர் தெளிந்தவர்போல் ………..செபதபசாத்திரங்களோதிக் கொள்வீர் யாத்திரைதீர்த்தங்களாடி நதிகள் தோறும் அலைந்து …………அலைந்துசுற்றி அலையுகிறீர் மாற்றியேபிறப்பமென்று பொய்ப்பிரட்டு வாய் சமத்து …………சாத்திரஞ் சொல்மடையர்களே பாத்திராபாத்திரமறியா பாவிகள் தான் பாடுபட்டுங் …………கூறறியாமாடுகள் தான். மாற்றிமாற்றிப் பிறப்போமென்று பொய்பேசுகின்ற மடையர்களே! நீங்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் போன்று, தீர்த்தமாடிச் செபதபங்கள் செய்கிறீர்கள். யாத்திரை செய்கிறீர்கள். நதிகள்தோறும் சுற்றிச் சுற்றி அலைந்து திரிகிறீர்கள். ஆகையால் நீங்கள் பார்க்கமுடியாத பாத்திரமாய திருவடியை அறியாதபாவிகளும் கூரியபுத்தியில்லாத மாடுகளுமாவீர்கள்.
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: none
ஞானம் எட்டி-41
தன் வரலாறு *************** 41.சாதியிலுயர்ந்தவன்காண் நவரத்ன ………..சங்கப்பலகையின் மேலிருந்தவன்காண் வேதியர் சாஸ்திரியர் துதிசெய்யும் விருது ……….பெற்றிடும் வீரசாம்புவன்காண் பாதிமதி சடையணிந்தோன் சிரசில்வளர் ……….பங்கயக்கங்கை யமிர்தச் செங்கைநதியில் சுருதியின் பொற்கமலம் மதிரவியின் சூட்டிடுஞ் ……….சாம்புவ னென்போன்காணும். நானே சாதியில் உயர்ந்தவனாவேன். ஒன்பது ரத்தினங்களால் இழைக்கப்பட்ட சங்கப்பலகையின் மேலிருந்தவன்; வேதியர்களும் சாஸ்திரிகளும் துதிசெய்யும் விருதுகளை அடைந்திருக்கின்ற வீரசாம்புவனும் (சுடலை காப்போன், வெட்டியான்) நானே; பிறைமதியைச் சடையில் சுமந்த சிவபெருமானுடைய தலையிலிருந்து இழிந்து வழியும் கங்காதேவியின் வேதமொழிபெற்ற திருவடிகளை இடைகலை பிங்கலைகளுக்குச் [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: none





