கந்தர் கலிவெண்பா – 20
ஒத்த புவனத் துருவே யுரோமமாத் தத்துவங்க ளேசத்த தாதுவாய் – வைத்த கலையே யவயவமாக் காட்டுமத்து வாவின் நிலையே வடிவமா நின்றோய் – பலகோடி அண்டமுருவாகி அங்கஞ் சராசரமாய்க் கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் – தொண்டுபடும் ஆவிப்புலனுக் கறிவளிப்ப ஐந்தொழிலும் ஏவித் தனிநடத்தும் எங்கோவே – மேவ சத்த – ஏழு தாது – இரத்தம், ஊன், மச்சை, மேதை, எலும்பு ஆகியன கலை – நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை ஆகியன காட்டும் – [...]
Posted: January 4th, 2009 under கந்தர் கலிவெண்பா, பக்தி.
Comments: none





