ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

சிவவாக்கியர்-2

2 .சரியை விலக்கல் ********************** 2.ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே. சீவனாம் சிவன் தன்னுள்ளே ஓடி ஓடித் தன்னுள் கலந்துள்ள சோதியாய் உள்ளது. அதை நாடி நாடிக் கண்டுகொள்ள இயலாது வாழ்வின் நாட்களும் கழிந்துபோய், உடல் வாடி, உள்ளமும் நொந்து வாடி மாண்ட மனிதர்கள்(மனுக்கள்) கோடான கோடியாம். இன்னும்எளிதாய்ச் சொல்ல: உடலின் உள்ளிருக்கும் ஏக இறையை இருக்குமிடத்தைவிட்டு உடலுக்கு வெளியே [...]

ஞானக் குறள்-(281-290)

  3. தன்பால் **************** 29. மெய்நெறி (281-290) ********************************   281. செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ் சொல்லு மவுனத் தொழில்.   உந்திக்கமலத்தில் செய்யும் ஞானவினையினால் முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.   திருமந்திரம்:   “விளங்கிடும் வாயுவை மேலெழ வுன்னி நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளே வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச் சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே.”   கும்பிச்சு = நிறைந்து. நலங்கிடுதல் = ஒடுங்குதல். ஒடுங்கும் கழுத்திலும் கொப்பூழிலும் உள்ள உயிர்ப்பை [...]