பிரபுலிங்க லீலை-1.13
பிரபுலிங்க லீலை ******************** 13. நாற்கதி தருமிடர் கடந்து நச்சுநர் பார்க்கதி முதலிரு பத்தைந் தாங்கதி மேற்கதி பெறவருள் விளங்கும் அல்லமன் சீர்க்கதி யிருபதோ டைந்துஞ் செப்புவாம். கதி = படலம், மூச்சுக் காற்று நாற்கதியாம் தேவகதி, மனிதகதி, விலங்குகதி, நரககதி தரும் துன்பங்(இடர்) கடந்து, மண்தத்துவம்(பார்க்கதி) முதலான இருபத்தைந்து தத்துவங்கள் (இருபத்தைந்தாங்கதி) கடந்து நிற்கும், விரும்புவோர்(நச்சுநர்) வீடுபேறு(மேற்கதி) பெற அருளும் அல்லமன் சரிதத்தைச் சீருடன் இருபத்திஐந்து படலங்களில் இயம்புவோம். தத்துவங்கள் இருபத்தி ஐந்து: பூதம் 5, [...]
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





