பழமொழி நானூறு – 4
4.விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத் துளக்கமின்று என்றனைத்தும் தூக்கி விளக்கு மருள்படுவதாயின் மலைநாட என்னை பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள். விளக்கு – உண்மை நிலையை விளக்குவதால் இப்பெயர் பெற்றது. துளக்கம் – அசைவு – பொருள் நிலை வேறுபாடு மலை நாட்டை உடையவனே! விளக்கிற்கு வேண்டிய நெய் முதலிய பொருட்களை விலை கொடுத்து வாங்குவது அது இருளைப் போக்கும் என்னும் தன்மையை ஆராய்ந்தேயாகும். விளக்கு தெளிவாகக் காட்டாது தானே மழுங்குதலைச் செய்தால் பொருள் கொடுத்து வாங்கியதன் பயன் [...]
Posted: February 13th, 2009 under தமிழமுது, பழமொழி நானூறு.
Comments: none
ஞானக் குறள்-(131-140)
2.திருவருட்பால் *********************** 14.கலை ஞானம் (131-140) *************************************** 131. சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில் முத்திக்கு மூல மது. “இரவி சங்கரன் – ஈசுவரி திங்கள். ஆக சத்தியே சந்திரன்(திங்கள்). அந்தச் சத்தியாம் சந்திரனுடைய கலையைச் சங்கரனின் கலையாம் சூரிய கலையொடு ஊடுருவினால் அவ்வினையே முத்திக்கு மூலமாம். வாசிட்டக்காரர் கூறுவது: “விராவிவரும் புறநின்று மபான னென்னும் வியன்மதிய மேனியெல்லாங் – குளிரவிக்கும் பிராணனெனுஞ் சூரியன்றான் கனலாயுள்ளே பேசியவிவ் வுடற்பாகம் – பிறக்குப் [...]
Posted: April 6th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 9
ஞானம் எட்டி-10
ஞானம் எட்டி-10 ****************** 10.யோகாதி யோகநிலைத் திருந்த போக்கு ………….. முற்பனமாங் கற்பமுண்டு சாகாப் போக்கும் வேகாத் தலையுமதி ரவியின் போக்கும் ………… வெண்சாரை கருநெல்லி விதித்த போக்கும் போகாப்புனலுஞ் சவர்க்காரப் பூநீர்ப் போக்கும் …………. பூதலமெ லாமகிழும் பொருளின் போக்கும் ஆகாத மனிதர்களை யகற்றும் போக்கு ………. மசடில்லா மாதுரசக் குளிகை காப்பாம். யோகமும், மகாயோகமும் நிலைத்திருந்த விதத்தையும், கற்பம் உண்ணவேண்டிய முறை பிறழாது உண்டு சாகாமல் செத்து வாழும் விதத்தையும், வேகாத்தலையையும், சந்திர சூரிய [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: none





