ஞானக் குறள்-(21-30)
1. வீட்டுனெறிப்பால் ********************* 3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை (21-30) **************************************************** 21. கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலா முற்றுடம்பா லாய வுணர்வு. ஊன்றிப்பார்ப்பதனால் (perception) உண்டாகும் சூக்கும உடலில் உண்டாகும் அறிவால் உருவாகும் உணர்வினால் எல்லாவற்றையும் கற்கலாம், கேட்கலாம், அறிவுக்கண்ணால் பார்க்கலாம். இச்சருக்கத்தில், உடலென்பது சூக்கும உடலேயாகும். இத்தகுதியை அடைந்தவர்கள் மறைகளில் இருக்கும் சாற்றிறப் பூட்டுக்களை உடைத்துப் பொருள் காணமுடியும், மருமங்களையும் அறியமுடியும். திருமூலர் : “ஒண்ணா நயனத்திலுற்ற வொளி தன்னை கண்ணாரப் பார்த்து [...]
Posted: April 6th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 11





