ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

சிவ வாக்கியர் – காப்புச் செய்யுள்

“அறியதோர் நமசிவாய மாதியந்த மானதும் ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம் சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம் தோ(ஷ)டதோ(ஷ்)ட பாவமாய்கை தூரதூர வோடவே கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமுங் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி யோதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.” சுரிய = சுழலும்; கற்பகம் = யானைமுகன்; உரை:- “நமசிவய” எனும் மந்திரமே ஆதியும் அந்தமும் என்று அறி. அங்ஙனம் அறிந்தபின்னர் முப்பத்துமுக்கோடி தேவர் எனப்படும் ஆயிரத்து இருநூறு வகைத் [...]

சிவவாக்கியர் வாழ்க்கைக் குறிப்பு

சிவவாக்கியர்   இவரின் வரலாறு பற்றி ஆதாரமேதும் கிட்டவில்லை. செவிவழிக் கதைகள்தான் நிலவி வருகின்றன. இவைகளில் சில: “துவாபர யுகத்தில் திருமழிசையில் வாழ்ந்து வந்த பார்க்கவ முனிவருக்கு ஆண்மகவொன்று பிறந்தது. “கணிக்கண்ணன்” எனப் பெயரிட்டு வளர்த்தனர். பிறக்கும்போதே “சிவசிவ” எனக்கூறிப் பிறக்கவே சிவவாக்கியர் ஆனார்.” அடுத்த கதை:-”திருமழிசையில் வாழ்ந்துவந்த அந்தணர் ஒருவருக்குப் பிறந்த இவர், தன் குலவழியாம் மாலியத்தைப் பேணாமல், சைவத்தில் திளைத்தார். பின்னர், திருமால் காட்சியளித்து, அருளிய பின்னர் இவர் திருமழிசை ஆழ்வார் ஆனார்.” மற்றுமொரு [...]