ஞானக் குறள்-(121-130)
2.திருவருட்பால் ************************** 13.தெரிந்து தெளிதல் (121-130) ******************************************* 121.தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில் கூறிய பல்குணமு மாம். உடலின் உள்ளே தோன்றும் அறிவாகிய ஓங்காரத்தில் நிலைத்து நின்று, அதையே சிவ சொரூபமென தெளிந்தறிந்தால், ஆன்றோர்களால் சொல்லப்பட்ட ஞானிக்குறிய எல்லாக் குணங்களியும் அடையலாம். திருமந்திரம்: “உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக் கள்ளத்தி னாருங் கலந்தறி வார்இல்லை வெள்ளத்த நாடி விடுமவர் தீவினைப் பள்ளத்தி லிட்டதோர் பந்தருள் ளானே.” மெய்யடியார்தம் அன்புடலாகிய பள்ளத்தில், இறைபணியாகிய பந்தலின் நிழலில் சிவம் [...]
Posted: April 6th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 4
ஞானக் குறள்-(111-120)
2.திருவருட்பால் ************************* 12.நினைப்புறுதல் (111-120) *************************************** 111. கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத் திருத்திச் சிவனை நினை. அசைவையொழித்துப் (கலங்காமல்) பார்வையால் உள்ளத்தில் எண்ணங்களை நிலைநிறுத்திக் கருத்தினில் சதா சதாசிவனை நினை. 112. குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து மண்டலங்கள் மேலாகப் பார். ஓங்காரமாம் பிரணவத்தின் நடுவில் முக்கலையொன்றி அதன் மேல் ஊன்றிப்பார். வாசிட்டம்: “ஆந்திர வேட்டனிகை யென்றோர் தனிநாடி நாடி கணூரணுகி நிற்கும் வாய்ந்தவிசை வீணையுடல் வட்டம்போனீர்ச் [...]
Posted: April 6th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: none
அன்பும் சிவமும்
அன்பும் சிவமும் ******************** திருமந்திரம் ************* “அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான் முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன் அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள் அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.” புறத்தான் = அன்பின் மேலுள்ளவன். உடலாயுள்ளான் = அன்பினையே உடலாக உள்ளவன். அணுகிய = நெருங்கிய முன்பினுள்ளான் = உலக உற்பத்திக்கு முன்னும், அதன் அழிவுக்குப் பின்னும் சிவனாம் சிவம் இன்ப இயல்பை உடையவன். இன்ப இயல்பின் வாயிலாம் அன்பினுள்ளே இருக்கிறான். அந்த அன்புக்குக் காவலாய் புறத்தாகவும் [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 7





