ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானக் குறள்-(191-200)

  2.திருவருட்பால் ************************** 20.சதாசிவம் (191-200) ********************************   191. பத்துத் திசையும் பரந்த கடலுலகும் ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம்.   எட்டுத் திக்குகளும், மேல், கீழ் ஆகியவைகளும் சேர்ந்து பத்துத் திக்குகளாயின. உலகமெலாம் உள்ள தூல சூக்குமங்களில் சிவம் வியாபித்து கலந்து நிலைத்திருக்கும்.     192. விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல் உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.   ஆகாயத்தில் பூரணமாக நிலையாக நின்று விளங்கும் சுடரொளியாகிய ஆதவன் (ஆ+தவன்) போல் உடலினுள்ளே சிவஒளி வியாபித்துள்ளது. [...]