ஞானக் குறள்-(141-150)
2. திருவருட்பால் ************************** 15.உருவொன்றி நிற்றல் (141-150) ************************************************ 141. எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே உள்ளகத் தீச னொளி. எள்ளுக்குள் எண்ணை நிறைந்திருப்பதைப் போல் உடலுக்குள் இருக்கும் பிரணவத்துள் இறைவனின் ஒளியும் இருக்கிறது. மஸ்தான் கீர்த்தனைகள்: “நாடாத பேர்கள் பயம்பயம் பயமென்ன நம்பிய பேர்கள் ஜெயம்ஜெயம் ஜெயமென்ன தேடிய பேர்கள் நயம்நயம் நயமென்ன திக்குத் திசைகளெங்கு மிக்கவொளி பரப்பி ஒக்க உலகமொரு கைக்குள் ளடங்கும் நம் பரமுததன் குணங்குடி.” [...]
Posted: April 6th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 13





