பிரபுலிங்க லீலை – 2.34
நாராயணர் கூட்டம் வருதல் ************************** 2.34 சங்க மொன்றுடன் ஒன்றுதாக் குறவொளி தழைக்குந் துங்க நேமியும் அன்னவா யுறவலை சுருட்டும் பொங்கு வேலைவந் தெனவரிக் கணங்களற் புதத்த எங்கள் நாயகன் பேரவை யிடத்துவந் திறுத்த. சங்கம் – சங்கு. ஒளி தழைக்கும் – ஒளிபெருகும். துங்கநேமி – உயர்வினையுடைய ஆழி. அன்னவாய் உற – அப்படியே நெருக்கமாகப் பொருந்த. பொங்குவேலை – பொங்குகிற கடல். அரிக்கணங்கள் – நாராயணர்களின் கூட்டம். அற்புதத்த – வியக்கத்தக்கபடி. வந்து இறுத்த [...]
Posted: December 27th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





