ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பிரபுலிங்க லீலை-2.6

பிரபுலிங்க லீலை ******************* 2.6 ஒழுகுறும் அருவி யீட்டம் ஒலியினா னகுவெண் டிங்கள் பழகுறு முடற்க ளங்காற் பாகசா தனன்கூர்ங் கோட்டு மழகளி றுமிழ்ம தத்தான் மலர்மிசைக் கடவு ளுர்தி அழகுறு நடையா லன்றி அறிதரப் படாவக் குன்றில் அருவியீட்டம் – அருவிகளின் தொகுதி, நகு – விளங்குகின்ற, பாகசாதனன் – தேவர் கோமான், மழகளிறு – இளமையினையுடைய வெள்ளையானை, மலர்மிசைக் கடவுள் – நான்முகன், ஊர்தி – ஊர்தியாகிய அன்னம். கைலைமலை வெண்ணிறமாக இருப்பதால் ஆங்கு [...]

பிரபுலிங்க லீலை-2.4

பிரபுலிங்க லீலை ******************* 2.4 கொள்ளைவண் டிழிந்து தாது …………குடைந்துமூகக் குழவு டைந்து கள்ளழிந் தொழுகு செம்பாற் கடுக்கை …………வேய்ந் திலகு வேணி வள்ளல்வெண் புகழ்தி ரண்ட வளங்கெழு …………கைலைக் குன்றில் வெள்ளிவந் தத்தி யாச மாசவே …………விளைந்த தம்மா. கொள்ளைவண்டு – கூட்டமாகிய வண்டுகள்,(கொள்ளை கொள்ளுகிற வண்டுகள்) இழிந்து – வந்து பொருந்தி, தாது – மகரந்தம், குடைந்து – மூழ்கி, மூகம் – மவுனம், குழவு – இளமை, கள் – மது, கடுக்கைவேய்ந் [...]

பிரபுலிங்க லீலை-2.3

பிரபுலிங்க லீலை ******************** 2.3 நான்முக அண்டந் தன்னுள் நனிசிறந் தொப்பி கந்த(து) ஊன்முக விழிக ளாற்கண் டும்பர்கள் உவகை பூப்பந் தான்மிகு மருளான் மேனி சாத்திய பேரா னந்தக் கூன்முக மதிய ணிந்த கொற்றவன் கைலைக் குன்றம். நான்முக அண்டம் – பிரமனாற் படைக்கப்பட்ட உலகம், நனி சிறந்து – மிகவுஞ் சிறந்து, ஒப்பு இகந்தது – ஒப்பு இல்லாத தன்மை பொருந்தியது, ஊன்முகவிழிகளால் – ஊனையுடைய முகக் கண்களால், மேனிசாத்திய – வடிவைத் தாங்கிக் [...]