ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பழமொழி நானூறு – 7

ப‌ழ‌மொழி நானூறு – 7 ************************ உரைமுடிவு காணான் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப – நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும். உரை – சொல், வழக்கு வழக்கின் முடிவான உண்மையை ஆராயும் அறிவு நிரம்பப் பெறாதவன், சிறு வயதினன், என்று இகழ்ந்த நரைமுடி உள்ள இருவர் மகிழும்படி நரைமயிரை முடியில் முடித்து, அவர்கள் கூறிய சொற்களாலேயே நீதி வழங்கினான் கரிகால் பெருவளத்தான். ஆகவே, தத்தம் குலத்திற்குரிய அறிவு நூல்களைக் [...]

ஞானம் எட்டி-27

27. கருதிரண்டு காயமதா யான வாறுங் ………… கருவியதி லேவளர்ந்து வெழுந்த வாறும் உருத்திரண்டு கால்கைகள் வகுத்த வாறு ……… முடம்புக்குள் சதைநிணங்கள் தரித்த வாறும் திரு விருந்த மண்டபங்கள் சமைந்த வாறும் …… சிறுபிள்ளை யாய்ப்புவியில் பிறந்த வாறும் அரூ பியெனு நாதாக்கள் பாதம் போற்றி ….. யாதியிலே சாதிகுல முரைப்பே ணாண்டே. கருவானது திரண்டு உடலான விதமும், கருவிகரணங்களாம் இந்திரியங்களும் மனமும் அதிலே வளர்ந்து எழுந்த விதமும், கால்கைகள் உண்டான விதமும், உடலுக்குள் தசை [...]

ஞானம் எட்டி-25

25. பிரமகுல வேதியராய்ப் பிறந்தார் கோடி ………… பெருமையுள்ள சத்திரியராய்ப் பிறந்தார் கோடி திறமையுள்ள வைசியராய்ப் பிறந்தார் கோடி ……….. தெளிவான சூத்திரராய்ப் பிறந்தார் கோடி உறவதித நால்வகையாய்ப் பிறந்தார் கோடி ………. யுள்ளுணர்ந்து பாராமல் தள்ளினார்கள் அரனருளாற் சபைநிறைந்த வாண்ட மாரே ……… யாதியிலே சாதிகுல முரைசெய் வேனே. பிரமகுலமாம் வேதியராயும், பெருமையுள்ள சத்திரியராயும், திறமையுள்ள வைசியராகவும், தெளிவான சூத்திரர்களாகவும் பிறந்தவர்கள் கோடி. உறவு (உற்ற சமயம்) நால்வகையாய்ப் பிறந்தார் கோடி. உள்ளுணர்ந்து பாராமல் தள்ளி [...]