ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Tamil Blogs & Sites

Tamil 10 top sites [www.tamil10 .com ]
Tamil Top Blogs free counters

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது ulavu.com

ஞானரத்தினக் குறவஞ்சி (31-35)

31.எங்கும் பரந்த பெரும் பொருளென்னடி சிங்கி? – அது அங்கிங்கு மெங்குமாய்க் கண்ட பெருவெளி சிங்கா. எங்கும் பரந்த பெரும் பொருள் என்னடி சிங்கி? அது அங்கு, இங்கு எங்குமாய்ப் பரந்த சிதாகாயப் பெருவெளி சிங்கா! 32.அண்ணிணு மெண்ணம் அழியாப் பொருளென்ன சிங்கி – இரு கண்ணையு மூட இருளழி யாப்பொருள் சிங்கா! எண்ணமாகிய நினைவு கிட்டினாலும் அழியாத பொருள் என்னடி சிங்கி? அது கண்களை மூட இருக்கும் இருள்தானடா சிங்கா! (கன்ஸூல் மஹபியா) 33.ஆங்கார வுடலுக்கு [...]

ஞானரத்தினக் குறவஞ்சி (21-30)

21.”ஆசைகொண் டுநம்மை யாட்டுவா ராரடி சிங்கி? – அது அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா!” ஆசைகொண்டு நம்மை இப்படி ஆட்டிப் படைப்பவர் யாரடி சிங்கி? ஐம்புலன்களில் ஆகாயம் தவிர எஞ்சி நிற்கும் அக்கினி, வாயு, நீர், மண் ஆகியவைதானடா சிங்கா!” 22.”ஆசைபா சப்பலன் அனுபோகம் ஆரடி சிங்கி? – அது அங்கம் பொருந்திய பங்குமண் அல்லவோ சிங்கா!” ஆசை, பாசம் முதலியவைகளின் பலன்களை அனுபவிப்பது(அனுபோகம்) யாரடி சிங்கி? மண் தத்துவத்தாலாகிய அங்கங்கள் பொருந்திய உடல்தானடா சிங்கா. [...]

ஞானரத்தினக் குறவஞ்சி (11-20)

11.”முன்னே முளையாய் முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? – அது மூளை முனையிரு கண்ணிக ளல்லவோ சிங்கா!” முதன் முதலில் முளையாய் முளைத்த இடம்எது சிங்கி? மூளையின் முனையில் கண்ணிகளாய்த் தொங்கிகொண்டிருக்கும் கண்களடா சிங்கா. 12.”முன்னே யுருவாய் முடிந்திட மெவ்விடம் சிங்கி? – அது பெண்ணாணு மாகப் பிறந்த தலமடா சிங்கா!” உருவாகி உடலெடுத்து முடிந்தது எவ்விடம் சிங்கி? பெண்ணும் ஆணுமாய் பிறக்கும்போது வெளிவரும் இடமடா(தலமடா) சிங்கா. 13.”இந்த வுடலுக்கு வேரென்ன தூரென்ன சிங்கி? – அது இந்த [...]