Siththan.com » குறள்

ஞானக் குறள்-(11-20)
1. வீட்டுனெறிப்பால்

2. உடம்பின் பயன் (11-20)

11.    உடம்பினைப் பெற்ற பயனாவ  தெல்லா

முடம்பினி  லுத்தமனைக்  காண்.

இந்த மானிட  உடலைப் பெற்றது,  இதற்குள் இறைவனைக் காண்பதற்கேயாம்.

12. உணர்வாவ வெல்லா  முடம்பின் பயனே

யுணர்க  உணர்வு  டையார்.

அறிவுடையவர்கள் அறிவைப் பயன்படுத்தி இறைவனை (இவ்வுடலில்)  உணர்வதே  இவ்வுடல்  எடுத்ததின்  பயன் என்ற் அறிவர்.

திருமந்திரம்:

“உணர்வு மவனே யுயிரு மவனே

புணர்வு மவனே புலவி யவனே

யிணரு மவன்றன்னை யெண்ணலு மாகான்

துணரின் மலர்க்கந்தந் துன்னி நின்றானே.”

புலவி = பிணக்கு. துணர் = கொத்து.

இணரும் = இதயத்தில் கலந்திருக்கும்.

சிவனும், அவனின் அடிமையாம் உயிரும், மலரும் மணமும் போல இருக்கும். அதனால், உயிர்களின் உணர்வும் அவனே, உயிரும் அவனே, புணரும் புணர்வும் அவனே, புலப்பும் அவனே. உள்ளத் தாமரையாகிய பூங்கொத்தில் இடையறாது கலந்தருள்கின்றனன். எனினும் அழுந்தி அறிவதாகிய அனுபவத்தாலன்றி, எழுந்து மொழிவதாகிய சொல்லால் கூற முன்னிலையாகிய எண்ணத்தால் எண்ணவும் ஆகான்.

பாம்பாட்டிச் சித்தர்:

அருவாயும் உருவாயும் அந்தி யாயும்

அந்தமுமாயும் ஒளியாயும் ஆகம மாயும்

திருவாயும் குருவாயும் சீவனாயும்

செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!

உருவிலியாயும், உருவமுடையதாயும், முடிவு ஆகவும், இருளாயும், ஒளியாயும், மேன்மையுடையதாயும், குருவாயும், சீவனாயும், அனைத்திலும் கலந்து, பொருந்தியுள்ள மேன்மையான பொருளைப் போற்றி ஆடு பாம்பே!

13.    ஒருபய னாவ  துடம்பின் பயனே

தருபயனாஞ்  சங்கரனைச்  சார்.

தரும் – இக பரத்தைத் தரும்;

சங்கரனை – தீமைகளையும், அல்லன   என்று  ஒதுக்கப்பட்ட, கூடாதவைகளையும் அழிக்கும் அரனை;

ஒரு பயன் – ஒப்பற்ற தனிப்பெரும் பயன்.

“சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி” என்றும் ஆன்றோர்கள் கூறியிருப்பதால் தேகத்திலுறையும் (மெய்யில்+உறையும்) தெய்வத்தை ஆதியாகிய விந்துநாதமாகிய ஒலியால் உணர்ந்து அறிவதே மனுவுக்கு அளிக்கப்பட்ட ஒப்பற்ற பயன்.

திருமந்திரம்:

“நாதமுடிவிலே நல்லாளிருப்பது

நாதமுடிவிலே நல்யோகமிருப்பது

நாதமுடிவிலே நல்ஞானமிருப்பது

நாதமுடிவிலே நஞ்சுண்ட கண்டனே”

ஓசைமுடியும் இடமே திருவருள் வெளிப்படும் இடம்.

அதுவே அகத்தவம்.

அத்தவப்பேறே திருவடி உணர்வு.

அங்கேதிருநீலகண்டன் வெளிப்படுவான்.

“சத்தியார்கோயி லிடவலஞ்சாதித்தான்

மத்தியானத்திலே வாத்தியங் கேட்கலாம்

தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படும்

சத்தியஞ் சொன்னோஞ் சதாநந்தி ஆணையே.”

சத்தியார்கோயில் = உடல்.

மத்தியானம் = மத்தியதானம்.

வாத்தியம் =நாதம்.

உடலாகிய கோயிலில் உயிர்ப்பை வலமூக்கின் வழிநிறுத்தினால் புருவநடுவாம் பரவெளியில் நாதமாகிய ஒலியினைக் கேட்கலாம். “தித்தித்தா” எனும் தாளத்திற்கேற்பக் கூத்தபிரான் வெளிப்படுவான். நந்திமீது ஆணை. இதுவே சத்தியம்.

14.    பிறப்பினாற்  பெற்ற பயனாவ  தெல்லாந்

துறப்பதாந் தூநெறிக்கட்  சென்று.

(தூ – பரிசுத்தமாகிய; நெறிக்கண் – வழியின் மூலமாக; துறப்பதாம் – மும்மலங்களாகிய, ஆணவம், மாயை, கன்மம் ஆகியவற்றிலிருந்து நீங்கி இருத்தலாகும்)

பரிசுத்த வழியில் சென்று எல்லாவகையான இச்சைகளிலிருந்தும் நீங்கி இருத்தலே (வெறுத்து ஒதுக்குவதே) பிறப்பினால் பெற்ற பயன்.

“துறவு” என்பது மும்மலங்களிலிருந்தும், இகபர போகங்களில் மனத்தை அலையவொட்டாது, எல்லா வகையான இச்சைகளிலிருந்தும் நீங்கி இருத்தலே.

“ஒகானூ பீஹி மினுஸ் ஸாஹிதீன்”(புனித குர்-ஆன் -12-12)

அவர்கள் சாதனையால் (அல்லாவையன்றி ஏனையவைகளை) வெறுத்துவிட்டார்கள். உலகத்தையும் – அதன் போகங்களையும் (தவாபு), சுவர்க்கத்தையும்,அதன் சுகங்களையும் (நிகுமத்து) நினைத்தாலே அசுத்தம் (முழுக்கு) உண்டாகிவிடும்.

15. உடம்பினா லன்றி  யுணர்வுதா னில்லை

யுடம்பினா லுன்னிய  தேயாம்.

(உன்னியது – வெளிப்படுதல்)

ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களின் மூலமாக ஏற்படும் செயல்களினாலேயே உடலில் ஓங்காரமானது (அறிவு) ஏற்படும். உடலில்லையேல் உணர்வில்லை.

ஞானேந்திரியங்கள் (ஐம்புலன்கள்)

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்கள்.

இவற்றை, தொக்கு, சிங்குவை, சட்சு, ஆக்கிராணம், சோந்திரம் என்பர்.

கர்மேந்திரியங்கள் (தொழில் உறுப்புக்கள்)

கைகால், வாய், எருவாய், கருவாய்.

இவற்றை, பாணி பாதம், வாக்கு, பாயுரு, உபத்தம் என்பர்.

16. மாசற்ற  கொள்கை  மனத்தி  லடைந்தக்கால்

ஈசனைக் காட்டு  முடம்பு.

(கொள்கை – கட்டுப்பாடு)

மூல மலங்களாகிய (அல்லன – விலக்கப்பட்டவை) அழுக்குகளை நீக்கும் கட்டுப்பாட்டை மனத்தில் அடைந்து விட்டால், எல்லாம் வல்ல ஈசனை உடம்பே சுட்டிக் காட்டிவிடும்.

17.    ஓசை  யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும்

நேசத்தா லாய  வுடம்பு.

(நேசத்தாலாய – ஞானேந்திரிய, கர்மேந்திரிய ஒற்றுமைகளினால் உண்டாகிய;  உணர்வுகள் – அறிவும் அறிவின் தொடர்புடையவைகளும்;)

ஞானேந்திரிய, கர்மேந்திரிய ஒற்றுமைகளினால் உண்டாகிய உடல், ஒலியால் (சப தபங்களால் உண்டாக்கும் ஒலி அலைகளினால்) அறிவு முதலிய உருவம் இல்லாதவைகளை(அரூபங்கள)ப் பார்த்துணரும் நிலைக்குக் கொண்டு வந்துவிடும்.

ஞானேந்திரியங்கள் (ஐம்புலன்கள்)

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்கள்.

இவற்றை, தொக்கு, சிங்குவை, சட்சு, ஆக்கிராணம், சோந்திரம் என்பர்.

கர்மேந்திரியங்கள் (தொழில் உறுப்புக்கள்)

கைகால், வாய், எருவாய், கருவாய்.

இவற்றை, பாணி பாதம், வாக்கு, பாயுரு, உபத்தம் என்பர்.

18.    உயிர்க்குறுதி யெல்லா  முடம்பின் பயனே

அயிர்ப்பின்றி யாதியை நாடு.

(அயிர்ப்பு – ஐயம்)

ஐயமாகிய சந்தேகம் தீர்ந்தால் சன் (ஒளிபெற்ற) + தேகம் கிடைக்கும். உடலிலுள்ள ஐம்புலன்கள், மூலாக்கினி, சூரிய சந்திரன், பி(வி)ந்துநாதம், இவைகளின் கலைகளை எழுப்பி, சீவனிடத்தில் சமர்ப்பித்தால், ஆன்ம ஒளியாகிய (சீவப்பிரகாசத்தோடு) கலந்து, அறிவுக்குப் பலத்தை கொடுக்கும்.

கலைகளை எழுப்ப, பார்வையையும் மனத்தையும் ஒன்றுகூட்டி இடைவிடாது உச்சியில் உள்ள இலக்கை நோக்கி மேலே காணுதல்( நாடுதல்) வேண்டும்.

ஆதி – ஆதீ – ஆ+தீ – ஆன்மாவாகிய தீ – ஆன்ம அக்கினி.

ஐயத்திற்கிடமின்றி   ஆதியை  நாட உயிருக்குறுதி – இதுவே உடலின் பயன்.

19.    உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம்

திடம்பட வீசனைத்  தேடு.

ஈசனை உறுதிபடத் தேடுவதற்காகவே உடல் உனக்குத் தரப்பட்டுள்ளது.

திருமந்திரம்:

“உடலாங் குகையில் உணர்வாகும் பீடத்து

அடலார் சமாதி இதயத்த தாக

நடமாடிய குகை நாடிய யோகி

மிடையாகா வண்ணம்சா திக்குமெல் லவ்வே.”

இடறு = இல்லாமல்

உடல் என்னும் குகையில், உணர்வு என்னும் ஆசனத்தில் (இருக்கை) மல முதலியவற்றை வெல்லும் திண்மை(பக்குவம்) வாய்ந்த நிட்டை கூடும் நிலையமாக நெஞ்சம் விளங்கும். இந்த நெஞ்சத்தை இடப்பாகத்தில் கொண்டு ஈசன் நடனமாடுகிறான். யோகியர் அவனையே நாடி நிற்கின்றனர். இடையூறு சிறிதும் நேராது நிட்டையினை உடலில் நிலைபெறச் செய்கின்றனர்.

20.    அன்னத்தா லாய  உடம்பின் பயனெல்லா

முன்னோனைக் காட்டி விடும்.

ஆண்களுக்கு அன்னத்தினால் விந்தும், பெண்களுக்குச் சுரோணிதமும் உண்டாகிறது. இவையிரண்டும் கூடித்தான் இன்னுமொரு உடல் எடுக்கிறது. ஒரு சவத்திலிருந்து இன்னுமொரு சவம் வெளிவருதலால் அதற்குப் பெயர் “பிர+சவம்”.

இவைகளையுண்டாக்கியது (நாதகலைகள்) அன்னமே. இப்படிப்பட்ட உடல் செம்மை (செம்+மெய்) ஆனால், அது நம் முன்னோனாகிய இறைவனக் காட்டிவிடும்.

மோட்சம் செல்லும் வழி (1-10)
1. வீட்டுனெறிப்பால்

1.மோட்சம் செல்லும் வழி

1.    ஆதியாய்  நின்ற  வறிவுமுத  லெழுத்

தோதிய  நூலின்  பயன்.

மனிதர்கள் கற்ற நூல்களின் பயன் என்னவெனில் எல்லாப்பொருட்களுக்கும் ஆதிமூலமாயும், முன்னதாகவும் உதித்த முதல் எழுத்தாகியது குத்தெழுத்தே -( .)

அறிவினுள்ளிருக்கும் உணர்வைக் குறிக்கும் எழுத்தே குத்தெழுத்து. நூல்களைப் படிப்பதனால் உண்டாகும் பயன் என்னவெனில் தனக்குள்ளே இருக்கும் ஆதிப்பொருளான அறிவை உணர்வதே.

வாசிட்டம் :

“அறியா வறிவை யறியாரே”

தேவபூசை கதை :

“தெய்வந்தானியாதென் றோதில், கேவலமே யரியல்ல, அரனல்ல,  பூதவுடற் கிடைத்ததல்ல, வோவுமன மன்றடி முடியுமிலாச் செயப்படா உணர்வே தெய்வம்.”

திருமந்திரம் :

“தரணி சலங் கனல் காற்றத்த வானம்

அரணிய பானு வருந் திங்க ளங்கி

முரணிய தாரகை முன்னிய வொன்பான்

பிரணவ மாகும் பெரு நெறிதானே”

தரணி – நிலம். சலம் – நீர். கனல் – தீ. அரணிய – அழகிய.

அங்கி – சிவவேள்வித் தீ.

காட்டுத் தீ – ஆகவனீயம், வேத அக்கினி மூன்றில் ஒன்று.

வீட்டுத் தீ – காருகபத்தியம், வேத அக்கினி மூன்றில் ஒன்று.

பாட்டுத் தீ – தெக்கணாக்கினி, வேத அக்கினி மூன்றில் ஒன்று.

முரணிய – வலிமை மிக்க. பாட்டு – ஞானம்.

நிலம், நீர், தீ, காற்று, இவைகளுக்கு இடமளிக்கும் ஆகாயமாகிய வானம், சூரியன், சந்திரன், விண்மீன்கள், இவைகளின் சேர்க்கையால்(சந்தியால்) விளையும் சிவ வேள்வித் தீ ஆகிய ஒன்பதும் பிரணவம் எனப்படும் ஓங்காரத்துள்ளே உள்ள ஒளியாம். ஆதியெழுத்தும் ஓங்காரமே. அதுவே சிவபெருமானின் சார்புருவமாகும்.

2.    பரமாய  சத்தியுட்  பஞ்சமா  பூதந்

தரமாறிற்  றோன்றும்  பிறப்பு.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் சூக்கும சக்திகள், தக்க அளவின்படி அன்னத்தில் கலக்கிறது. அந்த அன்னத்தினாலேயே, நாதபிந்து கலைகள் உண்டாகின்றன. நாதம் என்பது ஒலி, இந்திரியம் (சுக்கிலம், முட்டையாகிய அண்டம்). பிந்து என்றால் புள்ளி, விந்து.

திருமந்திரம்:

“விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி

ஒழிந்த முதலைந்தும் ஈரைந்தொ டேறிப்

பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்

ஒழிந்த நுதலுச்சி உள்ளே ஒளித்ததே.”

கணவனும் மனைவியும் கருத்தொருமித்து அன்புகொண்டு இன்புறும் வேளையில் யோனி விரிந்தது; அதனுள் லிங்கம் விழுந்தது. அதிலிருந்து உணர்வு கலங்கி ஒழுகியது விந்து. நுண்ணுடலில் தங்கியிருந்த ஒளி, ஓசை, ஊறு, சுவை, நாற்றம் எனும் நுண்மையாகிய(கூர்மை, நுட்பம், நேர்த்தி) ஐந்து தன்மாத்திரைகளும், அறிதற்(அறிய உதவும்) கருவி ஐந்து செய்தற்(செய்ய உதவும்) கருவி ஐந்து ஆகப் பத்துடன் கூடிய மழையாகப் பொழியும் நீர் முதலாகச் சொல்லப்படும் ஐம்பூதங்களும் தோன்றின. அவற்றால் போற்றப்படும் கரணங்களும்(ஐந்து பொறிகள்) தோன்றின. புருவநடுவிலும் உச்சியிலும் நின்று உணரும் தொழிலும் இடைவிடாது நிகழத் தொடங்கியது.

ஐம்பூதங்களின் சூக்கும சக்திகள், தங்களுடைய கலைகளிலிருந்து பிறப்புக்கு வேண்டிய கலைகளைப் பிரித்து நாத சக்தியில் கலப்பதினால் பிறப்பு உண்டாகிறது.

3.    ஓசை  பரிசமுருவஞ்  சுவை  நாற்ற

மாசை  படுத்து  மளறு.

ஐம்பூதங்களின் சூக்கும சக்திகளான சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் ஆகியவைகள் மனத்தில் ஆசைகளோடு சம்பந்தப்படும்போது மனமானது சேறாகிவிடும். அதாவது பஞ்சதன்மாத்திரைகள் ஆசைகளோடு இணயும்போது நரகிற்கு இட்டுச்செல்லும்.

பஞ்சதன்மாத்திரைகள்:

செவி, நாக்கு, கண், மூக்கு, தோல் என்னும் விண், வளி, தீ, நீர், மண், என்னும் பூதங்களின் குணங்களினின்று தனித்த குணங்களை உடைய மேற்படி பூதங்கட்குக் காரணமாயுள்ள – சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் ஆகியன.

திருவாசகம்

“வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க”

சலனமென்பது தோன்றவிருக்கும் நிலை. சலனமே பிரபஞ்ச உற்பத்திக்குக் காரணம். சித்தமாகிய மனம் ஒரு தெளிந்த தடாகம். சேற்று நீர் இல்லை. அலை வீசவில்லை. அதனால் அடியில் உள்ள மண் தரை தெரியும். மனிதனின் கண் திறந்ததுமே மனம் விழிக்கிறது. கண்போன போக்கில் மனம் செல்கிறது. அதனால் எண்ணங்கள் கொப்பளித்து ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு மேலே எழும்புகிறது. தடாகம் குழம்பி விடுகிறது.

எண்ணங்களே பிறவிக்கு மூல காரணம். அதனால் பிறவிகள் பெருகுகின்றன. எண்ணங்களுக்கு வலிவு கொடுப்பது ஆசை. ஆசையின் இருப்பிடம் மடமையாம் இருள். இறையருள் பார்வை பட்டவிடமெலாம் மடமை நீங்குகிறது. ஆசைகள் அறுபடுகின்றன்றன. அதனால் எண்ணங்களின் நொதிப்பு(fermentation) நீங்கிக் கொஞ்சம் தெளிவு கிட்டுகிறது. பின் எண்ணங்களின் உற்பத்திசாலையாம் மனதின் கொதிப்பு குறைகிறது.

மனமடங்கிய நிலையில் இறையருள் கிட்டுகிறது.

4.    தருமம்  பொருள்  காமம்வீடெனு  நான்கு

முருவத்தா  லாய  பயன்.

ஆத்துமத்தை அறியும் தர்மம், உடலிலுள்ள மகத்தான செல்வம், பரத்தாசை, இப்போது வசிக்கும் வீடாகிய உடலை (தேசம்)விட்டு ஆன்மா நீங்கியபின் அது வசிப்பதற்கு வேண்டிய வீடாகிய மோட்சம்(உபதேசம்), ஆகிய நான்கும் இத் தேகத்தினால் உண்டாகும் பயன்களாகும். ஆத்மா இத்தேகத்தைக் கொண்டே, அறம்(தர்மம்), பொருள்(திரவியம்), இன்பம்(காமம்) என்னும் வழிகளில் சென்று வீடுபேறு(மோட்சத்தை) அடைகிறது.

விளக்கம் :

நாதபிந்து கலைகள் சேர்ந்து உடல் உருவாக்கப் பட்டபோது, அறம்(தர்மம்) என்னும் மகத்தான ஒரு ஒப்பற்ற சத்தியைக் கொண்டே அமைக்கப் பெற்றது. உலக செல்வம் அனைத்துமே உடலையே உறைவிடமாக ஆக்கிக் கொண்டுள்ளன. “அண்டத்திலுள்ளது பிண்டத்தில்” என்னும் முதுமொழி, இகவாழ்வை மட்டுமே அறிந்தவர்களையும் கூட சிந்திக்க வைக்கும். சிந்திக்கவில்லை எனில் பேரிழப்பு அவர்களுக்குத்தான். உடலில் உள்ள செல்வங்களின் நிழல்களே உலகில் தோற்றமாய்த் தோன்றுகின்றன.

அறிவுடையோர், உண்மைச் செல்வத்தின் சாயை(நிழல், நிறம்)களைக் கொண்டே அறமாகிய தர்மம் என்பதில் சம்பந்தப்படுகிறார்கள். உண்மையான செல்வத்தின் கெதி (மூச்சோட்டம்) என்னவாகிறது? இவ்வாறே, உடலிளுள்ள உண்மையான செல்வங்களைத் தருமத்தில் சேர்த்து இணைத்தலே ஞானவினையாகும்.

அறமும், செல்வமும் சேருவதால் ஆன்ம சம்பந்தமாகிய புண்ணியம் என்னும் வினை உண்டாகின்றது. இதனால் ஞான வாழ்க்கை அமைகிறது. அறத்தையும், செல்வத்தையும் இணைப்பதற்கு ஒரு சிற்பி வேண்டும். அதுவே காமம் (இன்பம் – இதுவும் நிழலே).

உடலோடு ஆன்மா கூடி உறவாடும்போது, உலக வாழ்வில் இருக்க ஒரு வீடு(தேசம்) இருப்பதுபோல், ஆன்மாவாகிய சீவன் (சிவன்) விலகியபின், சீவன் வசிக்க இன்னுமொரு வீடு (பரவீடு – பரதேசம்) வேண்டியதுதானே?

5.    நிலமைந்து  நீர்  நான்கு  நீடங்கி மூன்றே

யுலவை  யிறண்டொன்  றுவிண்.

நிலம்….5 : மெய், வாய், கண், மூக்கு, செவி

நீர்……4 :  ஆநந்தம், துக்கம் ஆகியவைகளால் – கண்ணில் இருந்து வரும் நீர், – (உள்முகத்திலிருந்து) இடக் – கண்ணிலிருந்து வெளிவரும் – சந்திராமிர்தம், வலக்கண்ணிலிருந்து – வரும் சூரியாமிர்தம், நாதநீராகிய – சுக்கிலமும் (விந்து).

அக்கினி.3 :  சூர்யாக்கினி, சந்திராக்கினி, மூலாக்கினி

வாயு (உலவை) 2 : பிராணவாயு, அபானவாயு.

ஆகாயம்….1 :  வெற்றிடமாம்(சூனியத்திலிருக்கும் துவாத சாந்தப் – பெருவெளி) இராப்பகலற்ற – சிதாகாசமே.

மானுட உடல் மேற்படி விகிதத்தில் உருவாகியுள்ளது.

6.    மாயன்  பிரமனு  ருத்திரன்  மகேசனோ

டாயுஞ்சிவ  மூர்த்தி  யைந்து.

சிவமூர்த்திகள் 5 பேர்கள் :

பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசன், சதாசிவன்.

பிரமன்……….நிலம்(பிருதிவி)

விட்டுணு………நீர்

உருத்திரன்…….நெருப்பு

மகேசன்………வாயு

சிவன்(சீவன்)….ஆகாயம்

7.    மாலய னங்கி  யிரவிமதி  யுமையோ

டேலும்  திகழ்சத்தி  யாறு.

விட்டுணு சத்தியான அலைமகளும் (இலக்குமியும்), பிரமனின் சத்தியான கலைமகளும் (சரசுவதியும்), அக்கினியும் (அங்கி), சூரியனும் (ரவி), சந்திரனும் (மதி), மலைமகளான (பார்வதி) உமையும் உடலில் பொருந்தி (ஏலும்) ஒளிவீசுகின்ற (திகழ்) சத்திகள் ஆறு.

திருமகள் – இலக்குமி : ஞானவினைகளுக்கு(கர்மாக்கள்), இலட்சியத்திற்கு

கலைமகள் – சரசுவதி :  அறிவிற்கு

அக்கினி : அஞ்ஞான இருளையகற்ற, பிராணணைப் பலப்படுத்த

சூரியன் : பெருமத்தைக்(பிரமத்தைக்) காட்ட

சந்திரன்: - தேகத்தைப் பார்ப்பதற்கு

மலைமகள் - பார்வதி : ஞானத்தைக் கொடுக்க

8.    தொக்குதிரத்  தோடூன்  மூளைநிண  மென்பு

சுக்கிலந்  தாதுக்க  ளேழு.

உடல் (தொக்கு), இரத்தம், மாமிசம் (ஊன்), மூளை, கொழுப்பு(நிணம்), எலும்பு (சுட்ட எலும்புச் சாம்பலாகிய அஸ்தி), சுக்கிலம் ஆக தாதுக்கள் ஏழு.

திருமந்திரம்:

“மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்

கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்

தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்

பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.”

கான் = கானல்

தேன் = திருவருள்

பூதம் = பருமை

மோகினி என்பது (தூவா)மாயையின் பெயர். அதில் கலை தோன்றும். அதிலிருந்து மூலப்பகுதி தோன்றும். இம்மூலப் பகுதிக்கு மான் எனப்பெயர். இதிலிருந்து எழுச்சியாகிய ஆங்காரம் தோன்றும். இந்த எழுச்சி மூன்று வகை. அவை, உணர்வு, உழைப்பு, உலகம். இதில் உலக எழுச்சியிலிருந்து பூதம் முதலான நுண்மை ஐந்தும் தோன்றும். நுண்மையிலிருந்து வான்(ஆகாயம்), வளி(காற்று) வளர்ந்து தோன்றும். கானலாகிய தீயும், நீரும், எல்லாம் கலந்து கடினமாக இருக்கும் நிலமும் தோன்றும். இந்த நுண்மைகளை, ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனக் கூறுவர். இந்த ஐந்து பூதங்களின் கூட்டுறவே புவனம்.பலவுலகத் தொகுப்பே புவனம். இவை 224 என்பர். இவை அண்ட தத்துவம்.

பாடலில் உள்ளது பிண்ட தத்துவம்.

9.    மண்ணோடு  நீரங்கி  மதுயொடு  காற்றிரவி

விண்ணெச்ச  மூர்த்தியோ  டெட்டு.

நிலம், நீர், தீ, சந்திரன், வாயு, சூரியன், ஆகாயம், ஆன்மா (பிராணண் – எச்சமூர்த்தி) ஆக மூர்த்திகள் எட்டு. இவைகளையே எட்டு கைகளாக இறைவனின் படத்தில் முன்னவர்கள் சித்தரித்துள்ளனர்.

திருமந்திரம்:

“எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களுங்

கட்டிய மூன்று கரணமு மாய்விடும்.”

அருவுடலாகிய நுண்ணுடல் ஒளி, ஓசை, ஊறு, சுவை, நாற்றம் என்னும் புலன்கள் ஐந்தும், அகப்புறக் கலன்களாகிய மனம், எழுச்சி, இறுப்பு என்னும் கரணங்கள் மூன்றும் ஆகிய எட்டினால் ஆகியது.

இப்பிரபஞ்சம் எந்த அடிப்படை விதிமுறைகளுடன் இருக்கவேண்டும் என்னும் ஞானமே வேதம். இதை எட்டு கால்களையுடைய அன்னப்பறவையின் உருவில் வந்து ஸ்ரீமன் நாரணன், பெருமனுக்கு(பிரம்மனுக்கு) உபதேசித்தார். அன்னமே ஹம்ஸம். ஐம்பூதங்கள்,அகங்காரம்,மகத்,பிரகிருதி ஆகிய எட்டுமே அன்னத்தின் கால்களாம். இது மாலியத்தார் கோட்பாடு.

10. இவையெல்  லாங்கூடி  யுடம்பாய  வொன்றி

னவையெல்லா  மானது  விந்து.

விந்துவாகிய சுக்கிலமே மேலே சொன்ன செல்வங்களை எல்லாம் உண்டாக்கியது. அச்செல்வங்களெல்லாம் ஒன்று சேர்ந்து உடம்பை உண்டாக்கியது.

ஆக, விந்துவாகிய சுக்கிலமே  (ஆதி) மூலவித்து.

ஞானக் குறள்-உள்ளடக்கம்
உள்ளடக்கம்

வீட்டு நெறிப்பால்

1.மோட்சம் செல்லும் வழி

2.உடம்பின் பயன்

3.உள்ளுடம்பின் நிலைமை

4.நாடி தாரணை

5.வாயு தாரணை

6.அங்கி தாரணை

7.அமுத தாரணை

8.அருச்சனை

9.உள்ளுணர்வு

10.பக்தியுடைமை

திருவருட்பால்

11.அருள்பெறுதல்

12.நினைப்புறுதல்

13.தெரிந்து தெளிதல்

14.கலை ஞானம்

15.உருவொன்றி நிற்றல்

16.முக்தி காண்டல்

17.உருபாதீதம்

18.பிறப்பறுத்தல்

19.தூயவொளி காண்டல்

20.சதாசிவம்

தன்பால்

21.குருவழி

22.அங்கியிற் பஞ்சு

23.மெய்யகம்

24.கண்ணாடி

25.சூனிய காலமறிதல்

26.சிவயோக நிலை

27.ஞான நிலை

28.ஞானம் பிரியாமை

29.மெய்ந்நெறி

30.துரிய தரிசனம்

31.உயர்ஞான தரிசனம்

ஞானக்குறள்-அறிமுகம்
முன்னுரை

பார்த்திப வருடப் பொங்கல் நன்னாளில் இதை வலையேற்றத் தூண்டிய எம்பெருமான் திருநீலகண்டம் துணை.

ஒளவைப் பிராட்டி அருளிச் செய்த நீதி நூல்கள் பல. ஞான நூல்கள் பல. ஞான நூல்களில் தலை சிறந்து விளங்குவது இந்த “ஞானக் குறள்”. இதில் சூக்குமங்கள் நிறைந்திருப்பதாலும், அவைகளை நடைமுறை அனுபவத்தில் உணராததாலும் இந் நூலுக்கு விரிவாக உரை எழுத யாரும் முன் வரவில்லை.

46 ஆண்டுகள் செய்த தவப் பயனாலும், என் ஞானாசிரியன் திரு.த.பொன்ராமன் அவர்கள் தந்த ஊக்கத்தாலும் உரையெழுதத் துணிந்தேன்.

ஞானாசிரியர் அமரர் பொன்ராமன்

இந்திய நாட்டில் வாழும் மக்கள் இறைவனை அடைய, நூல்கள் பேரறிவாளர்களின் பட்டறிவினால்(experience) எழுதப்பட்டன. நூல்கள் எழுதுவதற்கு முன்பே, ஞான மார்க்கத்தின் இரகசியங்களை வாயினால் ஒருவருக்கு ஒருவர் சொல்லி வந்தார்கள். பின்பு பீசங்களை ஏற்படுத்திய பிறகு, ஓலையில் அந்த எழுத்துக்களைக் கொண்டு தாங்கள் அனுபவித்த மகத்தான இரகசியப் பொருளைப் போதிக்க வேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்து, சீவர்களிடத்தில் வைத்திருந்த கருணையினாலேயே உபதேசித்து வந்தார்கள். அவ்விதமாக வெளிப்பட்ட நூலே வேதமாகும்.

இதுவே முதல் நூலாக விளங்குகிறது. இவ்வேதத்தை அறிந்து அநுபவித்த ஞானிகளும் பெரியோர்களும் இதன் மூலமாகக் கிடைத்த அனுபவத்தினால் சார்பு நூல்களை இயற்றினார்கள். வேதசாரம் ஞானிகளால் ஆறு உப அங்கங்களாகப் பிரிக்கப்பட்டன. அவைகளில், முதலாவதாகிய சிட்சை என்னும் அங்கத்தைத் தழுவியே வேதங்கள் அனுசரிக்கப்பட்டு வந்தன. கடவுளைக் காண வழி இரண்டு என வகுத்தனர். அவை சுரம், சரமென உணர்த்தினார்கள். அவைகளை நாதத்தின் மூலமாகவும், பிராண அபான வாயுக்களின் மூலமாகவுமே அடைய முடியுமென்று உணர்த்திப் பாக்களைப் பாடி வைத்தார்கள்.

அது போலவே, ஓங்கார சொரூபமாகிய நம் நாட்டின் (இந்தியாவின் மேல் ஓம்மைப் பொருத்திப் பார்க்கவும்) வடபுலத்தில் வசித்துவந்த ஞானிகளால் சத்தி அம்சமாகிய செங்கிருதமென்னும் மொழியானது ஆலய வழிபாடு, வேள்வி செய்தல், முன்னோருக்கு ஆண்டுக்கு ஆண்டு செய்யவேண்டிய சடங்குகள், திருமணம் ஆகியவைகளுக்கு (பரவித்தைக்கு) மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த மொழி பேசுவதற்குப் பயன்படவில்லை என்பதால், அம்மொழியினின்றும் இந்தி, மராட்டி, குசராத்தி முதலிய வடபுலத்து மொழிகளை உண்டாக்கிக் கொண்டனர். ஞான வினையாகிய ஆத்ம வித்தைக்குச் செங்கிருதத்தையே தாய்மொழியாக்கிக் கொண்டார்கள். இப்படியிருக்க, தென்புலத்தில், சிவமொழியான தமிழ் ஓங்கார பீசமாகத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அதில் அனேக பேரறிவாளர்கள் தோன்றி உலகுக்குத் தாங்கள் அநுபவித்த ஆநந்தமாகிய இரகசியத்தை வழிநூலாக்கி வழங்கினார்கள்.

தமிழை ஆதாரமாகக் கொண்டு பீசத்தைத் தமிழிலிருந்தும் ஒலியை செங்கிருதத்திலிருந்தும் எடுத்துக்கொண்டு ஒன்றாய்க் கூட்டிக் கிரந்தம் என்னும் மொழியை உண்டாக்கினார்கள். தமிழையே ஆதாரமாகக் கொண்டு தங்கள் அநுபவங்களை வெளிப்படுத்தி இருக்கும் ஞானிகளின் போக்குகளை, நாம் அநுபவித்துத்தான் உணரமுடியும். அது தவிற, அநுபவமில்லாமல் சாத்திரங்களைப் படித்து மட்டுமே முடிவுக்கு வருவது நன்றன்று. அதனால், ஞானிகளின் போக்குகளைச் சிதைத்து விடுவதினால் ஏற்பட்ட குற்றத்தையும், கற்றவர்கள் வார்த்தையே எதிர்பார்க்கும் மற்றவர்கள் கதியினாலேற்படும் (மூச்சோட்டம்) குற்றத்தையும் அடைவர்.

வேதாந்த ஆய்வு என்பதைச் சாற்றிறற(சாத்திர) ஆய்வோடு நிறுத்திக் கொள்ளுகிறார்களே தவிர தம் பிறப்பைப் பற்றியும், ஐம்பூதங்களை மானுட உடலில் இணைத்திருக்கும் மருமங்களையும், நாதபிந்து கலைகளின் இரகசியங்களையும், இன்னும் மற்றவைகளையும் ஆராயாமல் விட்டுவிடுகின்றனர். சாற்றிறங்களைப் படித்து அறிவதை விட தன்னை அறியவேண்டி ஆராய்ச்சியின் வழியிலே சென்றால்தான் சூக்கும தத்துவங்களை அறியமுடியும். கண்ணலே பார்த்து, அதன்பின் அநுபவத்திற்குக் கொண்டு வந்து உணர்வது முடியாத ஒன்று.

“சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே

வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?

மாத்திரைப்போ தும்முளே மறித்து தொக்க வல்லிரேல்

சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்தி முத்தி சித்தியே!”

மரண சமயத்தில் சாற்றிறங்கள் உதவாது. வாய் குழறும். நாவு இழுக்கும்.

கல்வி என்னென்ன? எதற்காக? என்ன செய்தல் வேண்டும்? என்னும் அறிவிற்காகவே.

சாற்றிறங்கள் குப்பை. ஞானச்செயலுக்கு ஆகாது.

செயல் இல்லையேல் ஒன்றுமில்லை.

விந்து நாறிச் சாக வேண்டியதுதான்.

ஞானச் செயல் என்பது சூரியகலை( வலக்கண்), சந்திர கலை (இடக் கண்), அக்கினி கலை (புருவ மத்தி) ஆகியனவற்றை ஒரே நேர்கோட்டில் நிறுத்துதல். அப்பொழுது 3 கலைகளும் ஒன்றாக இணைந்து மேலேறும். அதை சூட்சமமாகக் காட்டவே முப்புரி நூல் அணிவித்தனர். பெண்கள் முச்சடையிட்டுக் கொண்டனர்.

இதற்கு இன்னும் பல நூல் ஆதாரங்கள் இதோ:

ஞானக் குறள்:

நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே

எல்லையில் லாத சிவம்.

நல்லவற்றைக் கூறும் பல ஞான நூல்களைப் படிப்பதால் மட்டும் எல்லையில்லா சிவத்தையுணர்தல் அரிது.

சச்சிதானந்த சுவாமிகள்:

“ஏட்டைப் படித்திங் கிறுமாப்பா லென்னபயன்

நாட்டம் படித்தன்றோ நாமறுப்பம் – வாட்டமெலாம்

எச்சனனத் தேனு மிரும்பொருளை நாடாத

எச்சத்தா லன்றோ இவை.”

அருணகிரியந்தாதி:

“கற்றதனாற் றொல்லைவினைக் கட்டறுமோ நல்லகுலம்

பெற்றதினாற் போமோ பிறவிநோய் – உற்றகடல்

நஞ்சுகந்து கொண்டருணை நாதரடி தாமரையை

நெஞ்சுகந்து கொள்ளா நெறி.”

சிற்றம்பல நாடிகள்:

“தற்கம் படித்துத் தலைவெடித்துக் கொள்ளுமதைக்

கற்கநினையா தருளைக் காட்டுங் கருணையனோ.”

சச்சிதானந்த விளக்கம்:

“கோடிபல நூலறிவு வேதமுறை பேசினுங்

குருபாதம் வெளியாகுமோ.”

திருவருட்பிரகாச வள்ளலார்:

“சதுமறையாகம சாத்திரமெல்லாஞ் சந்தைப்படிப்பு நஞ் சொந்தப்படிப்போ

விதுநெறி சுத்தசன் மார்க்கத்தின் சாகாவித்தையை கற்றனனுத் தரமெனுமோர்

பொதுவளர் திசைநோக்கி வந்தனனென்றும் பொன்றாமை வேண்டிடிலென் றோழி நீதான் அதுவிது வென்னாம லாடோடிபந்து வருட்பெருஞ்சோதி கண்டாடோடி பந்து.”

சிவபோதசாரம்:

“கற்குமடப் பட்டுமிகக் கற்றவெலாங் கற்றவர்பாற்

றற்கமிட்டு நாய்போலச் சள்ளிடவோ – நற்கருணை

வெள்ள மொடுங்கும் விரிசடையார்க் காளாகி

யுள்ள மொடுங்க வல்லவோ.”

சசிவன்ன போதம்:

“ஆகம விதங்க ளறிவார்கள் பரமறியார்

யோகமொ டுறங்கு மவரேபர முணர்ந்தோர்

புராண மிதிகாச மெவையும்பொருளனைத்தின்

பிராண நறியா துளவிடத்திவை பிதற்றே.”

ஆக சாத்திரங்களைப் படிப்பதால் மட்டும் பலனில்லை. செயல் தேவை.

கல்வி ஆதாரம்.

செயலே முக்கியம்.

“தன்னை யறிந்தால் தலைவனைக் காணமுடியும்”

என்பதை அலசி ஆராயாமல் விட்டதே உண்மை ஞானம் மறைபட்டதிற்குக் காரணம்.

அதற்கு எடுத்துக்காட்டாக, வீடுகளிலும் ஆலயங்களிலும் (ஆன்மா இலயிக்கும் இடங்களிலும்) இறைவனை வணங்கும் போதும், கற்பூரம், சாம்பிராணிப்புகை, தேங்காய் இம் மூன்றையும் பயன்படுத்துவது எதற்கு? இறைவனை மகிழ்விப்பதற்காக என்று கூறி வாழ்நாளை வீணாக்கி வருகிறோம். இவைகளுடைய தத்துவங்கள் (உண்மைகள்) இரகசியமாக மறைக்கப்பட்டு இருக்கின்றன. மறைக்கப்பட்டிருப்பதால்தான் வேதங்கள் மறைகள் எனப்பட்டன.

இறைவன் தூபதீபங்களுக்கும் தேங்காய்க்கும் ஆசைப்படுபவரா? எங்கும் எதிலும் நிறைந்துள்ள இறைவனுக்கு இச்சையுண்டா? இந்த அற்பப் பொருள்களைக் காட்டி அவருடைய அருளைப் பெறமுடியுமா? தேங்காய், மாயையாகிய மட்டையினால் மறைபட்டும், பற்றாகிய நாரினால் கட்டப்பட்டும், ஆசையாகிய சிரட்டையினால் மூடப்பட்டும் இருக்கின்ற உண்மையாகியது (உள்+மெய் = சிவம்). அதனுள் இருக்கும் நீராகிய சத்தியும், இரண்டும் இணைந்தபின் உண்டாகிய உடலில் ஓடும் சீவன் சாம்பிராணிப் புகை. பிராணண் ஒளியைப் பிரகாசிப்பதையும், மன அசைவை நிறுத்துவதற்கும் கற்பூர ஒளியைக் காட்டினார்கள். இவைகளை அறிந்து உணர்வதே கல்வியின் பயன்.

இதைப்போலவே மறைக்(கப்பட்டுள்ள)கருத்துக்களை, நம் நாட்டின் உருவமைப்பிலும், நம் உடல் அமைப்பிலும், தெய்வமைப்பிலும், விழா வினைகளின் அமைப்பிலும், தெய்வ ஆலயங்களுள்ள ஊர்ப்பெயரின் அமைப்பிலும், மனிதர்களின் பெயரமைப்பிலும், வீட்டுச்சுத்தம், தேகசுத்தம், ஆகாரசுத்தம் முதலிய அமைப்பிலும் ஞானிகள் நூல்களின் சாரங்களாகத் தந்திருக்கின்றனர். இவைகளைப் புரிந்துகொண்டால் நூல்களின் கருத்துக்கள் எளிதில் விளங்கும்.

ஞானவினையானது உலகத்தில் சஞ்சரிக்கவும், யோகம் என்னும் தந்திரத்தை (தன்+திறத்தை) அறியாமல் மனம் கலங்கும் சீவப் பிறவியற்க்குப் பேருதவியாக இருக்கும் என்னும் எண்ணத்துடன் எமக்குப் புரிந்தவரை விளக்கப்பட்டுள்ளது.

இதைத் தேடுதல் வேட்டையிலுள்ளவர்கள் கண்டால் ஆநந்தப்படுவர். மற்றவர்கள் படித்தவுடன் தீர்மானிக்காமல், பூரணமாகப் படித்துத் தீர்மானிக்கவேண்டுகிறேன்.

நிறையிருப்பின் அடைவீர் ஆநந்தம், குறையிருப்பின் கூறுவீர் என்னிடம் (திருத்திக்கொள்ள).

மனு வாழ, மானுடம் பயன் பெறட்டும்.