ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

ஞானக் குறள்-(11-20)

1. வீட்டுனெறிப்பால் ********************** 2. உடம்பின் பயன் (11-20) *************************** 11. உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா முடம்பினி லுத்தமனைக் காண். இந்த மானிட உடலைப் பெற்றது, இதற்குள் இறைவனைக் காண்பதற்கேயாம். 12. உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே யுணர்க உணர்வு டையார். அறிவுடையவர்கள் அறிவைப் பயன்படுத்தி இறைவனை (இவ்வுடலில்) உணர்வதே இவ்வுடல் எடுத்ததின் பயன் என்ற் அறிவர். திருமந்திரம்: “உணர்வு மவனே யுயிரு மவனே புணர்வு மவனே புலவி யவனே யிணரு மவன்றன்னை யெண்ணலு மாகான் [...]

மோட்சம் செல்லும் வழி (1-10)

1. வீட்டுனெறிப்பால் ********************** 1.மோட்சம் செல்லும் வழி ************************************** 1. ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத் தோதிய நூலின் பயன். மனிதர்கள் கற்ற நூல்களின் பயன் என்னவெனில் எல்லாப்பொருட்களுக்கும் ஆதிமூலமாயும், முன்னதாகவும் உதித்த முதல் எழுத்தாகியது குத்தெழுத்தே -( .) அறிவினுள்ளிருக்கும் உணர்வைக் குறிக்கும் எழுத்தே குத்தெழுத்து. நூல்களைப் படிப்பதனால் உண்டாகும் பயன் என்னவெனில் தனக்குள்ளே இருக்கும் ஆதிப்பொருளான அறிவை உணர்வதே. வாசிட்டம் : “அறியா வறிவை யறியாரே” தேவபூசை கதை : “தெய்வந்தானியாதென் றோதில், கேவலமே [...]

ஞானக் குறள்-உள்ளடக்கம்

உள்ளடக்கம் ************* வீட்டு நெறிப்பால் 1.மோட்சம் செல்லும் வழி 2.உடம்பின் பயன் 3.உள்ளுடம்பின் நிலைமை 4.நாடி தாரணை 5.வாயு தாரணை 6.அங்கி தாரணை 7.அமுத தாரணை 8.அருச்சனை 9.உள்ளுணர்வு 10.பக்தியுடைமை திருவருட்பால் 11.அருள்பெறுதல் 12.நினைப்புறுதல் 13.தெரிந்து தெளிதல் 14.கலை ஞானம் 15.உருவொன்றி நிற்றல் 16.முக்தி காண்டல் 17.உருபாதீதம் 18.பிறப்பறுத்தல் 19.தூயவொளி காண்டல் 20.சதாசிவம் தன்பால் 21.குருவழி 22.அங்கியிற் பஞ்சு 23.மெய்யகம் 24.கண்ணாடி 25.சூனிய காலமறிதல் 26.சிவயோக நிலை 27.ஞான நிலை 28.ஞானம் பிரியாமை 29.மெய்ந்நெறி 30.துரிய தரிசனம் [...]