ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

குரு வாக்கு

ஏ! சீடர்களே! உலகிலுள்ள அனைவரையும் உயிர் என்னும் கயிற்றால் கட்டி பொம்மலாட்டம் நடத்துவது அன்னை பராசக்தியே. உன் தலைவியின் கட்டளையை நன்குணர்ந்து நிறைவேற்றுவதில் முழுக் கவனத்தையும் செலுத்து. உன் கதாபாத்திரத்தை நன்கு செய். குழந்தைகள் விளையாடும்போது தாயை மறப்பது இயல்பு. விளையாட்டு முடிந்தவுடன், குழந்தை ஓடிப்போய் அன்னையின் மடியில் தஞ்சமடைவதைப்போல் நாடகம் முடிந்ததும் அன்னையிடம் தஞ்சமாகிவிடு. நாடகத்தில் அரசன் வேடமிடும்போது மகிழாதே. அப்படி மகிழ்ந்தால் பிச்சைக் காரனாக வேடமிடும்போது துக்கம் தானே வரும். உன்னையுணர்ந்து, நான் இவன்; [...]

குருவை நம்பு

நீ மெய்ப்பொருளை அடைய வேண்டுமாயின் உன் ஞான ஆசிரியனை (குரு) கடவுளாக எண்ணி முழுமையாகவும், சத்தியமாகவும் நம்பு. குரு பயிற்றுவித்த மந்திரத்தைக் கடவுள் கொடுத்ததாக நம்பு. பயிற்றுவித்த மந்திரத்தை இடைவிடாது உதடு பிரியாதபடி ஓதுவாயாக. அப்போதுதான் நீ, யோகிகளில் சிறந்த யோகியாகவும், ஞானிகளில் சிறந்த ஞான சூரியனாகவும் விளங்குவாய். குருவாக்கை நம்பியவர்களுக்கு, இவ்வுலகில் அடையமுடியாதது, சாதிக்க முடியாதது என்பது எதுமில்லை. குருவாகிய கடவுளை நம்பினால் நீயும் அவனாகிறாய். கடவுளை அறிந்தவன் கடவுள் ஆவான். குரு வேறு; தெய்வம் [...]

நல்ல குரு யார்?

ஒரு நல்ல குரு தேவை. அவன் குணமென்ன? மதாச்சாரியன்: தனக்குப் பொருள் வரக்கூடிய வழிமுறைகளைப் பயிற்றுவித்து, அதைப் பின்பற்றினால் சுவர்க்கம் கிட்டும், அது கிட்டும், இது கிட்டும் என ஆசைகாட்டி அதன் மூலம் பொருள் தேடுவோன். காரியக் குரு: ஆரம்பத்தில் பற்றற்றவர் போலப்பேசி, பின்னர் “நீ நல்ல சீடனாயிருக்கிறாய். ஆகவே, உனக்கு மட்டும் இந்த மந்திரங்களை உபதேசிக்கிறேன். இதனால் எல்லாம் சித்தியாகும். ஆனால் தட்சணை கொடுக்கவிடில் சித்திக்காது” எனக் கூறிப் பணம் பிடுங்குவர். ஞானகுரு: மந்திர தந்திர [...]