ஞானக் குறள்-(301-310)
3. தன்பால் ************* 31. உயர்ஞான தரிசனம் (301-310) ************************************************ 301. கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப் பிண்டமு மூழி பிரியா. சூரிய சந்திர அக்கினி கலைகளை உந்திக்கமலத்தில் உள்ள அக்கினி மண்டலத்தில் சேர்த்துவிட்டால், உயிரையும் உடலையும் காலம்(ன்) பிரிக்கச் சக்தியற்றுப் போய்விடும். 302. வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத் தள்ளுமின் கால சரம். திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று கிழமைகளிலும், சந்திர கலையைப் பிங்கலையில் சேர்க்க வேண்டும். [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 5





