ஞானம் எட்டி-53
53.தந்தையுந்தாயுங்கூடி இருவருஞ் சருவியே ………….ரதிகேளி யாடையிலே விந்தையில்யான்பிறந்த சரித்திரத்தை விளம்புவே ………….னாண்டே யிந்தமேதினிதனிலும் உந்தியின்கமலமதி லுதித்தவித முற்பனமாகிய ………..தோர் கற்பனைசொல்வேன் சந்தையங்கள் தீர்ந்துவிடும் மாதா பிதாவின் சங்கை …………களறியவிந்நூல் சாட்சி யிதுகாண். தந்தைதாயிருவரும் தன்னை மறந்து மகிழ்ந்து வேடிக்கையாய் உரையாடிப் புணர்ந்ததால் நடந்த விந்தையில் இவ்வுலகில் நான் பிறந்த சரித்திரத்தை உரைப்பேன் ஆண்டே! முதலில் தாயின் கருப்பத்தில் தோன்றிய விதம் சொல்வேன். தாய் தகப்பன் ஆகியோருக்கு உள்ள ஐயங்கள் நீங்கும்பொருட்டு இந்நூலை நான் சாட்சியாய்ச் சொல்லுகின்றேன். ஐயங்கள் [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: 4





