சிவவாக்கியர் – 91
91. உடம்புயி ரெடுத்ததோ வுயிருடம் பெடுத்ததோ உடம்புயி ரெடுத்தபோ துருவமேது செப்புவீர் உடம்புயி ரிறந்தபோ துயிரிறப்ப தில்லையே உடம்புமெய் மறந்துகண் டுணர்ந்துஞான மோதுமே. உடலுக்கு உயிர் வந்ததா? அல்லது உயிருக்கு உடல் வந்ததா? அப்படி உடலுக்குள் உயிர் நுழைந்தது என்றால் அந்த உயிருக்கு உருவம் எது எனக் கூறுவீர். உடல் இறந்த பின்னரும் உயிர் இறப்பது இல்லை. ஆகையால் அந்த ஆன்மாவாகிய உயிர் ஆவியின் ஓட்டத்தில் சலனமற்ற கவனத்தை வைத்து ஒருமுகப்படுத்தி ஞானத்தை ஓதுவீர்களே! திருமந்திரம் ************* [...]
Posted: January 4th, 2009 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: none
சிவவாக்கியர்-4
வேத நிலை ****************** 4.வடிவு கண்டுகொண்ட பெண்ணை மற்றொருவ நத்தினால் விடுவனோ லவளையின்னம் வெட்டவேணு மென்பனே நடுவன் வந்தழைத்தபோது நாறுமிந்த நல்லுடல் சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகை கொடுப்பரே. மாயை என்னும் அழகிய பெண்ணை ஞானவினையாம் வாசி யோகத்தால் வெட்டி விட்டு கருத்தில் கலக்கும் நேரத்தில், அதைக் கெடுக்கத் திரும்பி வரும் மாயையை விடுவனோ? விடாமல், திருப்பியும் முன் செய்தவாறே வெட்ட வேண்டுமென்பேன். இல்லையெனில், நடுவனாகிய ஏமன் வந்து அழைக்கும்போது நாறிச் செத்த இந்த உடலை, மற்றவர்கள் சுடலையில் [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: none
ஞானக் குறள்-(161-170)
2.திருவருட்பால் ************************** 17.உருபாதீதம் (161-170) *********************************** 161. கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில் உருவின்றி நிற்கு முணர்வு. உடலைத் தன் வயப்படுத்தியிருக்கும், கருவாகிய மனம், புத்தி, சித்த, ஆங்காரம் இல்லாது, எண்ணமாகிய கருத்தை நினைவில் அசைவற்று நிறுத்த, அவ்வுடலில் (மோட்ச வீடு) அறிவாகிய உணர்வு உருவற்ற நிலையில் நிற்கும். 162. பிறத்த லொன்றின்றிப் பிறவாமை வேண்டில் அறுத்துருவ மாற்றி யிரு. பிறப்பித்த அந்தக்கரணங்கள் ஒன்றுமில்லாமலும், மற்றபடி உற்பத்தி ஆகாமலும் செய்யவேண்டுமானால், அதற்கு மூலகாரணமான சக்திகளை அவை தங்கியிருக்கும் [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 4

