ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானம் எட்டி-54

54.சோதிமதிசுடரொளியாய் தரித்தவாறுஞ் …………சுடருருவாய்நாதவிந்து தோன்றும்வாறும் நீதியில்லாப்பாழ்வீட்டி னிலைத்தவாறும் ………..நெல்லியதின்கனியதுபோல் திரண்டவாறும் கோதிலாக்கனியெனவே பழுத்தவாறுங் ………..குழவியெனப்புவிதனிலே பிறந்தவாறும் ஆதியிலேகருவூரில் குடியிருந்துஅறிவாலே ………….புவியினில்வந் தமைந்தேனாண்டே. என் ஆண்டையே கேளும்! ஒளிபொருந்திய கதிரவனும் சந்திரனும் தங்களின் ஒளியோடு நாதமும் விந்துவுமாய், சுடரின் உருவாய், தோன்றிய வகையும், உடல் (மெய்யாம் நீதி) என்னும் பாழ்வீட்டில் குடியேறி நிலைத்த விதத்தையும், அங்ஙனம் நிலைத்த அவ்விரண்டும் நெல்லிக்கனி போலுருண்டு திரண்டு கருவாய் உருண்டு திரண்ட விதத்தையும், அக்கருப்பையில் குற்றமற்ற(கோதிலா) கனியாய்ப் பழுத்த முறையும், பின்னர் குழந்தையாய் [...]

கலைகளும் கரு உற்பத்தியும்

இந்த சூரியக்கலை சந்திரக்கலை அறிந்து கூடும் கால், பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பாலறிய முடியும் என்கிறார்களே அது உண்மையா? உண்மையாயின் அது எவ்வண்ணம்? அதை நாமறிந்து ஆவதென்ன? கூடும்போது நினைவு எந்தக் கலையில் சரம் ஓடுகிறது?என்று சிந்திக்குமா? நம்மால் எதையும் செய்ய முடியாது எனத் தெரிந்தும் அது பொய்யா? மெய்யா? என அறிதல் அவசியமல்ல என்பது என் கருத்து. இதையெல்லாம் அறிந்துகொள்ள SCANNER வந்து விட்டது. “குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் [...]