ஞானம் எட்டி-45
45.வித்தையிலதிதமெந்தன் விளங்குந்திரு ……….வேதாந்த சாரமுண்டு மேதினியில்வாழ் எத்திசையெல்லாம் புகழும் இரவிமதி ………யேகாட்சரத்தைக்கண்டு சாகாமல்நான் பத்தியில்முத்திதரும் உலகமதில் ………பரைநூலறிந்த சாம்புவன்காணும் முத்தியுமெய்ஞ்ஞானநெறி முக்கண்ணுடைய ……..மும்மூர்த்தியானவர்கள் தம்மூலத்தினால். உண்மை ஞானமார்க்கத்தால் தம்மை அறிந்தவர்களுக்கு வீடுபேற்றைக் கொடுக்கின்ற மூன்று கண்களையுடைய, மும்மூர்த்திகளுக்கும் தலைவனான, சிவபெருமானுடைய திருவருளினால் கல்வியில் மிக்க தேர்ச்சியை அடைந்திருக்கின்ற நான் வேதாந்த சாரத்தை உண்டு எல்லாத் திசைகளிலுமிருக்கும் உலகத்தவரால் புகழப்பட்டு வருகிறேன்; சூரிய, சந்திர கலைகளுக்கும் ஆதாரமாயிருக்கின்ற ஓரெழுத்தை இனம் கண்டு சாகாமலிருந்து மோக்கத்தை அடையும் வழி அறிந்தவன். [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: none
ஞானம் எட்டி-18
ஞானம் எட்டி-18 18. கதிரொத்த விடந்தனிலே யிலகுஞ் சோதி ………. கனகரத்ன மிலகுதிரு மண்ட பத்தில் மதியொத்து நின்றிலங்குஞ் சுவாதிட் டானம் …….. வளர்ந்தவித ழிம்மூன்றா மங்கு லத்தில் நிகரொத்த பிரமன் சரசு வதியின் பாதம் …….. நினைந்துருகித் தாளிணையைப் போற்றி செய்து உதிரத்தில் சுக்கிலந்தான் வந்த வாறு …….. மோரெழுத்தா நாதவிந் தமைத்த வாறே. கனகரத்தினமாய் விளங்கும் திருமண்டபத்தில் அறிவுக்கதிர் வீசும். அம்மண்டபமே சுவாதிட்டானம். அங்குள்ள ஆறிதழில் வசிக்கும் பிரமன், சரசுவதி ஆகியோரின் இருதிருவடிகளையும் போற்றி, [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: none

