சிவவாக்கியர்-1
1. ஆனவஞ் செழுத்துளே யண்டமும் மகண்டமும் ஆனவஞ் செழுத்துளே யாதியான மூவரும் ஆனவஞ் செழுத்துளே யகாரமும் மகாரமும் ஆனவஞ் செழுத்துளே யடங்கலாவ லுற்றே. அஞ்செழுத்தாம் “நமசிவய”வுக்குள் அண்டமாகிய(பிண்டம் அண்டத்துள் அடக்கம்) பரந்த உலகங்களும், பல அண்டங்களைக் கொண்ட அகண்டமும், ஆதியாகிய சிவன், திருமால், பெருமன் எனும் பிரம்மனும், அகாரம் மகாரம் ஆகிய யாவையும் அடக்கமாம். திருமந்திரம்: “அகார முதலா யனைத்துமாய் நிற்கும் உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும் அகார உகாரம் இரண்டு மறியில் அகார வுகாரம் இலிங்கம [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: none





