பிரபுலிங்க லீலை – 2.31
உருத்திரகணிகையர் கூத்தியற்றுதல் ******************************* 2.31 செப்ப மைந்ததண் ணுமையிசை தாளமென் சிறுதாள் துப்ப மைந்தவொண் சதிதழீஇச் சுவையபல் காயம் உப்ப மைந்தஇன் கறியென நடித்தனர் உழையோ டொப்ப மைந்தகண் உருத்திர கணிகையர் உவந்து. செப்பு அமைந்த – புகழமைந்த. தண்ணுமை – மத்தளம். சிறுதாள் – சிறிய அடிகளது. துப்பமைந்த – நன்மை பொருந்திய. ஒண் சதி தழீஇ – அழகிய மிதிப்பினைத் தழுவி நடித்தனரென்க. உழை – மான் உவந்து – மகிழ்ந்து மானின் கண்களை [...]
Posted: December 24th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





