ஞானக் குறள்-(81-90)
1.வீட்டுநெறிப்பால் ***************************** 9. உள்ளுணர்வு (81- 90) ********************************* உள்ளுணர்வாவது அறிவாகிய ஓங்காரத்தின் சக்தியைக்கொண்டு யாவற்றையும் அறியும் தன்மை. 81.எண்ணிலியூழி தவஞ் செய்திங் கீசனை உண்ணிலைமை பெற்ற துணர்வு. கணக்கற்ற முறை அசைவற்ற தன்மையை உண்டாக்கித் தவமியற்ற, அசைவற்ற நிலைமை ஏற்படுமிடமாகிய இருதயகமலத்தில், சிவத்தை நிலைபெற்ற தன்மையுடன் அடைந்ததே அறிவின் சக்தியாம். ஆக, தவத்தின் மூலமாய் அசைவையொழித்து, சிவத்தை இருதயகமலத்தில் நிறுத்த அறிவுக்கு அளவற்ற சக்தியுண்டாம். ஊழி என்பது ஐம்பூதங்கள் மறையுங்காலம். ஐம்பூதத்தின் [...]
Posted: April 6th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 24





