பழமொழி 600
142.உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும். 143.உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை. 144.உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா? 145.உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை. 146.உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும். 147.உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு. 148.உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது. 149.உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும். 150.உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும். 151.உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. 152. உயிரோடு இருக்கும்போது [...]
Posted: February 7th, 2009 under தமிழமுது, பழமொழிகள் 615.
Comments: none





