ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானக் குறள்-(251-260)

  3. தன்பால் *************** 26. சிவயோக நிலை (251-260) *******************************************   251. அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி முடிமிசை யோடி முயல்.   உந்திக் கமலத்தின் அடிப்பாகத்திலிருந்து உண்டாகும் வாயுவாகிய அபானனைத் திருவடிகளோடு செலுத்திப் பிறகு பிரணவ உச்சிக்குள் செலுத்திவிடு.   வாசிட்டம் : புசுண்டர் கதை :   “ஆடுகின்ற பிராண லயத்தருகு மேவியபான லயத்தரு – குற்றுப்பிராணாபான ணூடுபயில் சிற்பரத்தை யேத்துகின்றே நுற்றவபானன் – றேற்றமொழிந்துநிற்க நீடுபிராணனு மிறக்க மூக்கினுச்சிநேர் விசும்பிற் [...]

ஞானக் குறள்-(41-50)

5. வாயுதாரணை (41-50) ************************* 41. மூலத்திற்றோன்றி முடிவிலிரு நான்காகிக் கால்வெளியிற் பன்னிரண்டாங் காண். காற்றானது குண்டலியின் மத்திய பாகத்திலுள்ள வாயு உதிக்குமிடத்தில் உதித்து, குண்டலியின் உச்சியில் இரண்டாகப் பிரிந்து, நான்கு திக்கிலும் பரவி, பேரண்ட வெளியாகிய துவாதசாந்த வெளியில் செல்லும்போது பன்னிரண்டு கலைகளாக வெளிப்பட்டு நிற்கும். “மூலம்” – என்பது மூலாதாரமல்ல. மூலாதாரம் என்னும் பழக்கச் சொல் ஒவ்வொரு பொருளும் உதிக்குமிடம். துவாத சாந்த வெளி யென்பது பிரணவ உச்சியைத் தாண்டிக் கலைகளோடு செல்லும்போது தலைக்கு [...]