ஞானக் குறள்-(211-220)
3.தன்பால் *********** 22. அங்கியில் பஞ்சு (211-220) ***************************** 211. அங்கியிற் பஞ்சுபோ லாகாயத் தேநினையில் சங்கிக்க வேண்டாஞ் சிவம். சிதாகாயமாம் பரவெளியில் இருக்கும் நினைவில் மூலாக்கினியைப் பாய்ச்சினால் அனலிற் பஞ்சுபோல் உடனே சிவம் சோதியாய் வெளிப்படும். ஐயுற வேண்டாம். 212. மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின் அப்பால தாகுஞ் சிவம். உயிர்ப்பை அறியும் உள் மெய்த் தத்துவத்தை அறியாதவர் மனதில் தெய்வ சக்தி இல்லாது சிவம் நீங்கி இருக்கும். மடமையே குடியிருக்கும். [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: none





