Siththan.com » ஆன்மா

ஞானம் எட்டி-49
49.அண்டபிண்டம்பிறந்ததெங்கே சிவசிவ அந்தணர்

…………முனிவர் வந்ததுதித்ததெங்கே

பிண்டம்பலவுயிரும் பிறந்தவகை பிரபந்தமிதை

………….யறிந்து பேசுவீர்காண்

மண்டலஞ்சூழுங் கதிர்மதியும் வன்னியும் பிறந்த

………….தெங்கே வானுமெங்கே

விண்டபொரு ளண்டருங்காணார் வேதியர்களே விசுவ

………….ரூபமறிந்து விளங்குவீரே.

வேதியர்களே! அண்டமும்,பிண்டமும் பிறந்த இடம் எங்கே? அந்தணர்கள், முனிவர்கள் பிறந்த இடமும் எங்கே? பிண்டமாகிய இவ்வுடலும், பல உயிர்களும் பிறந்த விதம் என்ன? இந்தக் கதையை முதலில் அறிந்துகொண்டு அப்புறம் பேசுங்கள். அண்டத்தில் சூழ்ந்திருக்கின்ற சூரிய சந்திரன், அக்கினி ஆகியவை உண்டான இடத்தையும், அதேபோல பிண்டத்தில் சூரிய சந்திரன், அக்கினி ஆகியவை உண்டான இடத்தையும், ஆகாயம் பிறந்த இடத்தையும் அறிவீர்களா? நான் கூறியவற்றின் உட்பொருளை வானவரும் (ஆன்மாவை மேய்க்கும் இடயனும்) காணார். அப்படியிருக்க நீங்கள் விசுவ ரூபம் எனப்படும் ஆன்மாவின் (விசுவநாதனின்) உருவறிந்தபின் எனக்குச் சொல்லுங்கள் பார்ப்போம்.

7.மனம் என்பது ஆன்மாவா?
மனம் என்பது ஆன்மாவா?

மனம்:

முதலில் இந்தியச் சிந்தனை மரபில் மனம் என்றால் என்ன என்று

பார்க்கலாம். நம் முன்னோர் மனதை உள்ளுறுப்பு (அந்தக்கரணம்)

என்று கூறினார்கள். எப்படி மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய

ஐம்பொறிகளும் வெளியுறுப்புகளோ, இவற்றிலிருந்து வரும் அனுபவ

ங்களைப் பெறும் மனமும் ஓர் உறுப்பே. அது ஆறாவது உறுப்பு.

ஆனால் மனத்தை ‘ஸ்விட்ச் ஆ·ப்’ செய்துவிட்டால், மற்ற உறுப்புக

ளின் அனுபவங்களை நாம் பெறுவதில்லை. உதாரணமாக, நாம் தீவி

ரமாக யோசிக்கும்போது, நமக்கு இசை கேட்பதில்லை, பூவின் மணம்

தெரிவதில்லை என்பது போல. எனவே இந்த ஆறாவது உறுப்பு

இல்லாவிட்டால் மற்ற ஐந்து உறுப்புகளின் செயல்கள் பலனளிக்கா.

மனம்தான் இவற்றின் ஓட்டுநர்.

இதன் பொருள் என்னவென்றால், எவ்வாறு ஐம்புலன்களும் உடலின்

உறுப்புகளோ, அவ்வாறே மனமும் ஆறாவது ‘உள்’ உறுப்பு. அவ்வளவுதான்.

‘இந்த உடல்தான் நான்’ என்ற எண்ணம் இருக்கும்வரை

ஞானம் வாய்க்காது. மனமும் உடல்தான் என்றபின், மனமும் நானல்ல.

ஆனால் ஐந்து பொறிகளின் வழியே மனம் வெளிநோக்கிப் பாய்ந்து

கொண்டே இருக்கிறது. வெளிநோக்கிப் பாயும் மனம் இறைவனை

அடையாது. அதாவது ஞானத்தை அடையாது. மனத்தை உள்நோக்

கித் திருப்ப வேண்டும்.

மேற்கத்திய விஞ்ஞானத்தில் மனம் அறிவு இரண்டும் ஒன்றுதான். எல்லாமே

மூளையில் இருப்பவைதாம். அதாவது, புலன்களின் உணர்

வுகளுக்கான சமிக்ஞைகளைப் பெறுவது மூளைதான். ஒவ்வொரு வகை உணர்

வுக்கும் மூளையில் ஒவ்வொரு மையம் இருக்கிறது என்பார்கள்.

இந்தியச் சிந்தனையில் மனத்தை மூன்றாகப் பிரித்தார்கள்:

1. சித்தம்: (Mind) உணர்வுகளின் தொகுதியான பகுதி.

2. புத்தி: (Intellect) அறிவு.

3. அகங்காரம்: (Ego) ஆணவம். ‘நான்’, ‘என்னுடையது’ என்று எ

ண்ணவைப்பது.

மனம் என்பது எண்ணங்களின் தொகுதி. எண்ணங்கள் இல்லையேல்

மனம் இல்லை. இந்த மனம்தான் நாம் எது இல்லையோ அதை

யெல்லாம் நான் என்று நினைக்க வைக்கிறது. பாரதியின் ஞான ரதம்

படித்தீர்களானால் ‘சத்தியலோகத்துக்குள் நுழையவேண்டுமென்றால்

மனத்தோடு நுழையமுடியாது’ என்று அவருடன் வரும் கந்தர்வன்

சொல்லுவான்.

‘உங்களுக்கெல்லாம் சிந்திக்காமல் இருப்பது எவ்வளவு கடினமோ,

எனக்குச் சிந்திப்பது அவ்வளவு கடினம்’ என்று ஒருமுறை ரமண பக

வான் கூறினார். ஞானிகளுக்குத் தமக்கென்று ஒரு மனம் கிடையாது.

எனவேதான் அவர்களுக்கு உயர்வு-தாழ்வு, விருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம்

என்பது போன்ற இருமைகள் கிடையாது.

மனம் நம் உடலின் உள்ளே இருந்துகொண்டு உடலை ஆட்டிப்படைக்கும் ஒரு சூக்குமப் பொருள். மனம் அசைந்தால் உடல் முழுதும் அசைகிறது. மனம் ஒடுங்கினால், நம் உடலையும் மறந்து, நாம் இன்ன இடத்தில் இருக்கிறோம், இன்னதுதான் செய்கிறோம் என்னும் நினைவின்றி சுழுத்தி அவத்தையில் அழுந்தி விடுகிறோம். மனம் அடங்க, அதனால் மனோவாயுவும் அடங்க பிரேதா அவத்தைக்குப் போய்விடுவோம். இவைகளால் மனமே சலனத்துக்குக் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.

மனம் ஒருவனுக்கு வயப்பட்டால், அவன் யோகம், ஞானம் எதும் செய்யத் தேவையில்லை. பெரியோர்களெல்லாம் தம் மனத்தை வயப்படுத்தவே தவம் முதலிய முயற்சிகளைக் கையாண்டனர். எத்தகைய யோக ஞானங்களும் ஒருநிலைப்பட்ட சித்தமில்லையேல் பலன் தராது. நமது ஞான வினை என்னும் முக்கலை ஒன்றித்தலும் முற்றுப் பெறும் வரை மனிதனுக்கு பரிசுத்தம் இன்றியமையாத ஒன்று. ஆதலால், மனத்தை வயப்படுத்த முயலவேண்டுமே அல்லாது மனத்தை முற்றிலும் அடக்க முயலக் கூடாது. ஏனெனில், மனம் அடங்கிவிட்டால் ஒரு காரியமும் நடைபெறாது.

மனம் சுத்த மனம், அசுத்த மனம் என இரு வகை. காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம் என்பவைகளில் விருப்பமுள்ள மனம் அசுத்த மனம். மேற்கூறியவைகளில் வெறுப்படைந்து ஒளிவீசுவது சுத்த மனம். இதைத்தான் “அறிவு” என்கிறோம். மனம்தான் இவ்வுலகில் காணப்படும் நிலையில்லாப் பொருட்களை அடையும்படி செய்து மனிதனைத் தாழ்த்துகிறது. இதே மனம்தான், இவைகள் நிலையற்றவை என்று அறிவால் உணர்த்தி வெறுப்பூட்டி, ஆன்ம ஞானத்தைப் பெறவைத்து உயர்த்துகிறது.

மனத்தினால் செய்யப்பட்ட தொழிலே தொழிலாகும்; மனத்தினால் விடுபட்டதே விடுபட்டதாகும். மனம் நசித்தால் சனன மரணமென்னும் பெரிய காடு நாசமாகும். மன மயக்கம் என்னும் வித்தால் மாயா மலம் என்னும் கொடிய நச்சு மரம் பற்பல துன்பம் என்னும் கிளைகளுடன் செழித்து வளரும்.

ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தையும் விரும்பாமல் நீங்கியவர்களே மனமென்னும் வாசியை வென்றவர்கள். ஏனெனில், தீனியாசை, யோனியாசை ஆகிய இரண்டினில் யோனியாசையைச் சிலகாலம் வரை ஒத்திப் போட்டாலும், தீனியாசையை நீங்கி இருத்தல் கடினம். மருந்து உண்ணும்போது பத்தியம் இருக்கும்போதுதான் தெரியும் அதன் இன்னல். வைராக்கிய ஞானம் இல்லாதவர்கள், மானிடத் தோல் பொத்திய விலங்கிற்குச் சமம். நான் என்னும் அகங்காரத்தைத் தொலைக்காதவரை உண்மையான ஞானோதயம் கிட்டாது. ஞானோதயமாகாவிட்டால் பிரபஞ்சம் தோன்றும். அப்போது பிரும்மம்(பெருமம்) தோன்றாது. காற்றாடி போல் சுழலும் மனம் வயப்பட்டால்தான் அகந்தை நீங்கும். அகந்தையுள்ளவர் முத்தியை விரும்புதல் இருளைத் துணையாகக்கொண்டு சூரியனைப் பார்க்க முயன்றதுபோலாம்.

திருக்குறள்

யானென தென்னுஞ் செறுக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த வுலகம் புகும்.

இவ்வுலகத்தோரால் இனிமை எனக் கருதும் யாவும் எப்பொழுது எட்டிக்காய்போல் கசக்கிறதோ அப்பொழுதுதான் மனம் வயப்பட்டுள்ளது. திரண்ட மேகக்கூட்டம் பேய்க்காற்றால் எப்படிச் சிதறி ஓடிச் சூனியமாகி விடுதல்போல் கற்பனையால் மனம் நசிக்கும். நிறைவு – குறைவு, பெரிது – சிறிது நீங்கிய சமபக்குவத்தால் ஆனந்தத்தைத் தரும் பிரமபதம் சதாநித்தியமாகும். வெப்பமானது அக்கினியியிலிருந்து நீங்காமல் இருப்பதுபோல், தாழ்வைத்தரும் சஞ்சலம் மனதை விட்டு நீங்குவது மிகவும் கடினம். சலிக்கும் மனமே உலகமாம்.

மனம் எப்பொருளைப்பற்றி சதா சிந்திக்குமோ அப்பொருள் சித்திக்கும். எப்பொருளையும் மேன்மையாகப் பாவிக்க மேன்மையும், கேவலமாக நினைக்க கேவலத்தைத் தருவதாகவும் அமையும். ஆகவே, சகலத்துக்கும் மனமே காரணம்.

ஆகையால்தான் இவ்வளவு எழுதவேண்டி உள்ளது.

“கைஸா நிய்யத் அய்ஸா பரக்கத்”

எண்ணம் அப்படியோ அப்படியே வாழ்வு. அதாவது “எண்ணம்போல் வாழ்வு”.

ஆன்மா:

ஆன்மா ஆதியந்தமில்லாதது. அதுவே சீவனாகிய சிவன். சீவனை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்தவியலாது.

மனம் விழிப்பு நிலையில் மட்டுமே இயங்கும்.

ஆன்மா மேல்நோக்கிச் சென்றுகொண்டே இருக்கும்.

மனம் சலனத்தால் அலைபாயும் (குளத்தில் கல்லெறிந்தால் அலைகள் கிளம்புமாப்போல்).

சீவன் இல்லாத உடலில் மனம் இயங்காது.

ஆனால் மனம் உறங்கும்பொழுது சீவன் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

ஆக மனமும் ஆன்மாவாகிய சீவனும் வேறு வேறு.