ஞானக் குறள்-(181-190)
2.திருவருட்பால் ************************* 19.தூயவொளி காண்டல் (181-190) ************************************************ 181. தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த் தோன்றியக் காற்றூய வொளி. உதித்து உருவாகி நிற்குந் தத்துவங்களையும், அதன் தொடர்புகளையும் நீக்கி, தூய்மையான தத்துவாதிகளற்ற வெளிப்பிரதேசமாய்த் தோன்றும் பொழுது தூய ஆத்மஒளி உதிக்கும். சுருங்கச் சொல்லின் அஞ்ஞான தத்துவங்களின் தொடர்பு அற சிதாகாயத்தில் மலமறுத்துவிட்டால் ஆன்மவொளி ஒளி வீசும். வாசிட்டம்: “அன்றியே யதுதனையுந் தீரநீக்கி யறிபொருளின் முடிவான வறிவாற்றுன்னி யென்றுமுப சாந்தனாய்ப் பளிங்குப்போலுள் ளொளிமேவிச் [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: none





