ஞானக் குறள்-(71-80)
1. வீட்டுநெறிப்பால் ********************* 8. அர்ச்சனை (71-80) *********************** (அருச்சனை = பூசிக்கும் முறை. = கலைகளைப் பிரகாசம் பெற வைப்பதே. இதை அருட்சுனை என்றும் ஞானியர் கூறுவர்.) 71. மண்டலங்கள் மூன்று மருவவுட நிறுத்தி அண்டரனை யர்ச்சிக்கு மாறு. அண்டரனை = கண்ணுக்குள் இருக்கும் சிவனாகிய சீவனை. சூரிய, சந்திர, தீ மண்டலங்களை ஒருங்கிணைத்துத் (முக்கலையையும் ஒன்று சேர்த்து) தான் கண்ணுக்குள் இருக்கும் சிவனாகிய சீவனை அருச்சிக்கமுடியும். 72. ஆசனத்தைக் கட்டியரன் றன்னை யர்ச்சித்து பூசனைசெய் [...]
Posted: April 6th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: none





